ETV Bharat / sports

ஏஎஃப்சி கோப்பை: மாசியா அணியை எதிர்கொள்ளும் சென்னை சிட்டி!

ஏஎஃப்சி கோப்பையின் பங்கேற்கும் சென்னை சிட்டி அணி தனது லீக் போட்டியில் மால்தீவ்ஸ் கிளப் அணியான மாசியா அணியை எதிர்கொள்ளவுள்ளது.

AFC Cup - Chennai city to host maziya sports amp recreation in their first clash

author img

By

Published : Mar 11, 2020, 6:50 PM IST

ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பாக நடத்தப்படும் கிளப் அணிகளுக்கு இடையேயான ஏஎஃப்சி கோப்பைத் தொடரில் சென்னை சிட்டி அணி பங்கேற்கவுள்ளது. இதில் தனது முதல் லீக் போட்டியில் சென்னை அணி மால்தீவ்ஸ் கிளப் அணியான மாசியாவை எதிர்கொள்ளவுள்ளது.

2017ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் ஏஎஃப்சி கோப்பைத் தொடருக்கு மாசியா அணி திரும்பியுள்ளது. ஏற்கனவே 2019ஆம் ஆண்டு சென்னையின் எஃப்.சி அணி ஏஎஃப்சி தொடரில் பங்கேற்றது.

ஏற்கனவே குரூப் சுற்றுப் போட்டிகளில் பெங்களுரூ எஃப்.சி அணியை மாசியா அணி பெனால்டி மூலம் வீழ்த்தியதால், இந்தப் போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தப் போட்டி சென்னையில் நடக்கவுள்ளதால் சென்னை ரசிகர்கள் பலரும் சென்னை சிட்டி அணி வெற்றிகரமாகத் தொடரைத் தொடங்கும் எனத் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: ஐஎஸ்எல்: இறுதிப்போட்டியோடு ஆண்ட்ரே ஸ்கெம்ப்ரி ஓய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.