ETV Bharat / sports

முடிவுக்கு வந்ததா ஸ்லாத்தான் இப்ராஹிமோவிச்சின் கால்பந்து பயணம்? - ஸ்லாத்தான் இப்ராஹிமோவிச்சின் காயம்

சீரி ஏ கால்பந்து தொடருக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஏசி மிலன் அணியின் நட்சத்திர ஸ்ட்ரைக்கர் ஸ்லாத்தான் இப்ராஹிமோவிச்சின் பின்னங்காலில் காயம் ஏற்பட்டதால் அவரது கால்பந்து பயணம் முடிவுக்கு வந்ததாக வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

AC Milan striker Zlatan Ibrahimovic picks up calf injury in training

author img

By

Published : May 26, 2020, 7:18 PM IST

கரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் நடைபெறும் நடப்பு சீசனுக்கான சீரி ஏ கால்பந்து தொடர் ஜூன் 14 வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அந்நாட்டில் கரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்ததால் மே 4ஆம் தேதியிலிருந்து சீரி ஏ அணிகளுக்கு மைதானங்களில் சில கட்டுப்பாட்டுகளுடன் பயிற்சி பெற அனுமதி வழங்கப்பட்டது.

அதேசமயம், அடுத்த 2020-21 சீசனுக்கான சீரி ஏ கால்பந்து தொடர் செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கப்படும் என இத்தாலி கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. இதனால், நடப்பு சீசன் (2019-20) தொடர் ஜூன் 15 தொடங்கி ஆகஸ்ட் 20ஆம் தேதியுடன் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, சீரி ஏ கால்பந்து தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது சொந்த மைதானங்களில் தகுந்த இடைவெளியை பின்பற்றி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், நேற்று (மே 25) வழக்கம் போல் பயிற்சி மேற்கொள்ளும் போது ஏசி மிலன் அணியின் நட்சத்திர ஸ்ட்ரைக்கர் ஸ்லாத்தான் இப்ராஹிமோவிச்சின் பின்னங்காலில் காயம் ஏற்பட்டது.

39 வயதான இப்ராஹிமோவிச்சிற்கு இந்த காயம் ஏற்பட்டதால் அவரது கால்பந்து பயணம் முடிவுக்கு வந்ததாக கால்பந்து வல்லுநர்களிடையே பேச்சுகள் எழுந்துள்ளன. இந்த காயம் குறித்து இன்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டவுள்ள நிலையில் இவரது கால்பந்து எதிர்காலம் பற்றிய முடிவு விரைவில் தெரியவரும்.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இவர் கடந்த டிசம்பர் மாதம் ஆறு மாத ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏசி மிலன் அணியில் சேர்ந்தார். ஏசி மிலன் அணிக்காக இவர் விளையாடிய 10 போட்டிகளில் நான்கு கோல்கள் அடித்துள்ளார். இவரது வருகைக்குபிறகு எழுச்சி பெற்ற ஏசி மிலன் அணி நடப்பு சீசன் சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 26 போட்டிகளில் 36 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க: கால்பந்து வீரர்களுக்கு இரண்டாம் கட்ட வழிக்காட்டுதல்களை வழங்கிய இங்கிலாந்து அரசு...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.