ETV Bharat / sports

மெஸ்ஸி ஸ்டைலில் ஃப்ரீகிக் கோல் அடிக்கும் சிறுவன்! - Malapuram Messi

கேரளாவைச் சேர்ந்த 11 வயது சிறுவன் அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்ஸியைப் போன்று ஃப்ரீகிக் கோல் அடித்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது.

A freak to the ring on the goalpost; This is the Messi of Mambadu!

author img

By

Published : May 13, 2020, 9:10 PM IST

Updated : May 14, 2020, 2:52 PM IST

இந்தியாவில் கேரளாவும் மேற்கு வங்கமும் கால்பந்திற்கு பெயர்பெற்ற மாநிலங்களாகும். இந்த நிலையில், கேரளாவைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன் அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்ஸியின் ஜெர்சியை அணிந்து அவர் போலவே ஃப்ரீகிக் கோல் அடித்தார்.

கோல் போஸ்டின் இடது முனையில் வைக்கப்பட்டிருந்த வளையத்தின் நடுவே அவர் ஃப்ரீகிக் கோல் அடித்ததுதான் அச்சிறுவனின் ஸ்பெஷாலிட்டியே. கோல் அடித்த பிறகு அதை மெஸ்ஸி ஸ்டைலில் கொண்டாடி மகிழ்ந்தார். கால்பந்து பயிற்சிகளில்கூட இதுபோன்று துல்லியமாக கோல் அடிப்பது மிகவும் கடினமாகும்.

ஆனால், கடினமான விஷயத்தை இச்சிறுவன் தனது அசாத்தியமான திறனால் எளிதாக்கினார். இந்த வீடியோவை அவரது சகோதரர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். பின் இவரது திறனைக் கண்டு வியந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரெய்னா இவர் மெஸ்ஸி போல கோல் அடிக்கும் காணொலியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததையடுத்து, இந்தக் காணொலி வைரலானது.

தனது சகோதரருடன் மிஷல்

இந்நிலையில், சமூக வலைதளங்களில் கேரளாவின் குட்டி மெஸ்ஸி என அழைக்கப்படும் இச்சிறுவன் மிஷல் அபுலிஸ், மலப்புரம் மாவட்டம் மம்பாத் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் மம்பாத்தில் உள்ள அரசுப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துவருகிறார்.

அவர் நான்காம் வகுப்பு படிக்கும்போது தனது சகோதரர் வாஜித்துடன் கால்பந்து விளையாடத் தொடங்கினார். தனது ஊரில் நடைபெறும் கால்பந்து போட்டிகளைக் காண அவர் தனது சகோதரருடன் செல்வார்.

அப்படி கால்பந்து போட்டியை நேரில் பார்த்தபோதுதான் மிஷல் அபுலிஸுக்கு கால்பந்து மீது அதீத ஆர்வம் ஏற்பட்டது. அவரது சகோதரர் வாஜித், மம்பாத் எம்இஎஸ் கல்லூரி அணியின் கோல்கீப்பராக இருக்கிறார்.

மிஷலின் கால்பந்து திறன்

அவரது தந்தை அபவ்லைஸ் கனியன் (Aboulais Kaniyan) முன்னாள் மாவட்ட அணியின் கோல்கீப்பர் ஆவார். 11 வயதில் இத்தகைய திறமைக் கொண்ட மிஷல், ஜூனியர் பெங்களூரு எஃப்சி அணிக்கான தேர்வுக்குழுவின் இறுதிச் சுற்றில் வெளியேறினார்.

இருப்பினும் மனம் தளராமல் மிஷல் தனது ஆட்டத்தை மெருகேற்றிவருகிறார். மெஸ்ஸியின் வெறித்தனமான ரசிகரான இவர் மெஸ்ஸியைப் போல இரண்டு கால்களிலும் பந்தை ட்ரிபிள் செய்யக்கூடிய திறன்கொண்டவர்.

இதையும் படிங்க: ஜீரோ டிகிரியில் கார்னர் கிக் கோல் அடித்த கேரள சிறுவன்!

Last Updated : May 14, 2020, 2:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.