ETV Bharat / sports

இந்திய அணியின் முன்னாள் வீரர் காலமானார் - முன்னாள் கால்பந்து வீரர் மரணம்

1970 ஆசிய போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய அணியின் முன்னாள் கால்பந்து வீரரான அப்துல் லதிப் தனது 73ஆவது வயதில் வயது மூப்பின் காரணமாக இன்று உயிரிழந்தார்.

1970 Asiad bronze medal winning footballer Abdul Latif passes away

author img

By

Published : Mar 25, 2020, 6:14 PM IST

1970இல் பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய போட்டியில் கால்பந்து பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்தவர் அப்தில் லதிப். நடுகள வீரரான இவர் 1968இல் பர்மா அணிக்கு எதிரான ஆசிய கோப்பை தகுதிச் சுற்று போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுகமானார்.

அதன்பின் இந்திய அணிக்காக நான்கு போட்டியில் விளையாடிய இவர், 1969ஆம் ஆண்டில் சிங்கப்பூர் அணிக்கு எதிரான மார்கெடா தொடரில் ஒரு கோல் அடித்துள்ளார். சர்வதேச போட்டிகளை விடவும் உள்ளூர் போட்டியில் அனுபவம் வாய்ந்த வீரராகத் திகழ்ந்துள்ளார். சந்தோஷ் டிராபி தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடியுள்ளார். அதேபோல், முகமதீன் ஸ்போர்டிங் கிளப் அணிக்காக 35 கோல் அடித்துள்ளார்.

இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் இன்று கவுகாத்தியில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 73. அவரது இறப்புக்கு இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் பிரஃபுல் படேல் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பி.கே. பானர்ஜி காலமானார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.