டெல்லி: இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வருகிற 18ஆம் தேதி தொடங்குகிறது. இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்வுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனினும் மயங்க் அகர்வாலால் அணியில் இடம்பிடிக்க முடியவில்லை.
அதேபோல் அக்ஸர் பட்டேலுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. முன்னதாக ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது உமேஷ், முகமது ஷமி மற்றும் ஹனுமா விகாரி ஆகியோர் காயமுற்றனர். இந்நிலையில் அவர்கள் தற்போது அணிக்கு திரும்பியுள்ளனர். ரவிச்சந்திரன் அஸ்வினும், ரவீந்திர ஜடேஜாவுக்கு அணிக்கு பலம் என்றாலும் கேஎல் ராகுல் இல்லாதது ஒரு பலவீனமே.
15 பேர் கொண்ட அணியில் 5 வேகப்பந்து வீச்சாளர்கள், 2 விக்கெட் கீப்பர்கள் உள்ளனர்.
அணி வீரர்கள் விவரம் வருமாறு:
எண் | பெயர் | பொறுப்பு |
01 | ரோகித் சர்மா | பேட்ஸ்மேன் |
02 | விராத் கோலி | கேப்டன் |
03 | ஷுப்மன் கில் | பேட்ஸ்மேன் |
04 | சித்தேஸ்வர் புஜாரா | பேட்ஸ்மேன் |
05 | அஜின்க்யா ரஹானே | துணை கேப்டன் |
06 | ஹனுமா விஹாரி | சுழற்பந்து வீச்சாளர் |
07 | ரிஷப் பந்த் | விக்கெட் கீப்பர் |
08 | ரவிச்சந்திர அஸ்வின் | சுழற்பந்து வீச்சாளர் |
09 | ரவீந்திர ஜடேஜா | ஆல் ரவுண்டர் |
10 | இஷாந்த் சர்மா | பந்து வீச்சாளர் |
11 | பும்ரா | பந்து வீச்சாளர் |
12 | உமேஷ் யாதவ் | பந்து வீச்சாளர் |
13 | முகமது ஷமி | பந்து வீச்சாளர் |
14 | ரித்திமான் சஹா | விக்கெட் கீப்பர் |
15 | முகமது சிராஜ் | பந்து வீச்சாளர் |
இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 18ஆம் தேதி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இது கரோனா பெருந்தொற்று காலம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20க்கும் மேற்பட்ட வீரர்கள் இங்கிலாந்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் தற்போது 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்கு பின்னர், இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்தப் போட்டிகளில் புஜாரா திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று சச்சின் டெண்டுல்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடர்: பரிசுத் தொகை அறிவிப்பு