ETV Bharat / sports

உலக கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்று நெதர்லாந்து பந்து வீச்சு தேர்வு..

நியூசிலாந்து - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

world-cup-cricket-netherlands-vs-new-zealand
உலக கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற நெதர்லாந்து பந்து வீச்சு..
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2023, 2:20 PM IST

ஹைதராபாத்: ஐசிசி நடத்தும் 13வது உலக கோப்பை இந்தியாவில் கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 6வது லீக் போட்டில் நெதர்லாந்து அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்த இரு அணிகளும் இதுவரை உலக கோப்பை வரலாற்றில் ஒரே ஒரு முறையே சந்தித்துள்ளது. உலக கோப்பைக்கு தேர்வாகி அவர்கள் முதல் போட்டியாக நியூசிலாந்தை சந்தித்தனர். அந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்தது. அதன் பின் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இன்று நடக்கும் இராண்டாவது போட்டியில் அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் நெதர்லாந்து அணி தயாராகி வருகிறது. இருப்பினும் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை சமாளிக்குமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

போட்டிக்கான இரு அணி வீரர்களின் பட்டியல் :

நியூசிலாந்து: டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன்/ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்.

நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ'டவுட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீடே, தேஜா நிடமானுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ், சாகிப் சுல்பிகர், லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தத், பால் வான் மீகெரென்.

இதையும் படிங்க: இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்: சட்டவிரோதமாக டிக்கெட் விற்ற 30 பேர் கைது..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.