டெல்லி : 13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த 5-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
-
The England captain is OUT 🤯
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
This Naveen-ul-Haq wicket is one of the moments that could be featured in your @0xFanCraze Crictos Collectible packs!
Visit https://t.co/2yiXAnq84l to own iconic moments from the #CWC23 pic.twitter.com/dZSxQHDFWr
">The England captain is OUT 🤯
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 15, 2023
This Naveen-ul-Haq wicket is one of the moments that could be featured in your @0xFanCraze Crictos Collectible packs!
Visit https://t.co/2yiXAnq84l to own iconic moments from the #CWC23 pic.twitter.com/dZSxQHDFWrThe England captain is OUT 🤯
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 15, 2023
This Naveen-ul-Haq wicket is one of the moments that could be featured in your @0xFanCraze Crictos Collectible packs!
Visit https://t.co/2yiXAnq84l to own iconic moments from the #CWC23 pic.twitter.com/dZSxQHDFWr
இன்று (அக். 15) டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் 13வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
ஆப்கானிஸ்தான் அணியின் இன்னிங்சை ரஹமனுல்லா குர்பஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரன் ஆகியோர் தொடங்கினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பி ரன்களை சேகரித்தது. துரித ரன் சேகரிப்பில் ஈடுபட்டு வந்த ரஹ்மனுல்லா குர்பஸ் (52 ரன்), இப்ராஹிம் சத்ரான் (23 ரன்) தொடக்க ஜோடி 16வது ஓவரில் பிரிந்தது.
அடில் ரசீத் வீசிய பந்தில் தொடக்க வீரர் இப்ராஹிம் சத்ரான் (28 ரன்) ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ரஹமத் ஷா (3 ரன்), அதே அடில் ரசீத்தின் அடுத்த ஒவரில் வீழ்ந்தார். இதனிடையே மற்றொரு தொடக்க வீரர் ரஹ்மனுல்லா (80 ரன்) ரன் அவுட்டாகி வெளியேறினார். இங்கிலாந்து வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சுக்கு ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஈடுகொடுத்து விளையாடினர்.
ஒருபுறம் மிடல் ஆர்டர் பேட்ஸ்மேன் இக்ரம் அலிக்ஹில் போராடிக் கொண்டு இருக்கையில் மறுபுறம் ஆப்கானிஸ்தான் அணியில் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழத் தொடங்கின. ஹஸ்மத்துல்லா ஓமர்ஷாய் 19 ரன், அவரை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மத்துல்லாவும் தன் பங்குக்கு 14 ரன்கள் அடித்துக் கொடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி வந்த இக்ராம் அலிக்ஹிலும் (58 ரன்) அரைசதம் தாண்டி ஆட்டமிழந்தார். 49 புள்ளி 5 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 284 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணிக்கு 285 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டன.
தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ் 2 ரன்கள் எடுத்து இருந்த போது ஆப்கான் வீரர் பசல்ஹக் பரூகி பந்துவீச்சில் எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட் (11 ரன்) முஜிப் உர் ரஹ்மான் பந்துவீச்சில் போல்ட்டானார்.
மற்றொரு தொடக்க வீரர் டேவிட் மலான் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டம் கேப்டன் ஜோஸ் பட்லர் வெறும் 9 ரன்களில் நவீன் உல் ஹக் பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார். இதனிடையே லியாம் லிவிங்ஸ்டோன் (9 ரன்), ஆப்கான் சுழற்பந்து வீச்சாளர் ரசித் கான் பந்தில் எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த சாம் கரன் (10 ரன்) நபி வீசிய பந்தில் ரஹ்மத்திடம் கேட்ச் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த கிரிஸ் வோக்ஸ் சோபிக்காமல் (9 ரன்) வெளியேறினார். ஒருபுறம் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழுந்த நிலையில், நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடிய ஹேரி புரூக் (66 ரன்) ஆட்டமிழந்தார்.
ரஷித் கான் வீசிய பந்தில் ஆதில் ரஷித் (20 ரன்) நபியிடம் கேட்ச் ஆகி வெளியேறிய நிலையில், மார்க் வுட் (18 ரன்) ரஷித் கான் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணியால் 40.3 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் தலா 3 விக்கெட்டுகள், நபி 2 விக்கெட், பரூகி மற்றும் நவீன் உல் ஹக் தலா 1 விக்கெட்டினை கைப்பற்றி உள்ளனர். இந்த போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியன் மூலம் நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இதையும் படிங்க : ஐசிசி போட்டியா..? இல்ல பிசிசிஐ போட்டியா? - பாக். அணியின் இயக்குநர் மிக்கி ஆர்தர் அதிருப்தி..!