ETV Bharat / sports

IND vs WI: தொடரை கைப்பற்றுவார்களா தவான் & கோ... இன்று 2ஆவது போட்டி

author img

By

Published : Jul 24, 2022, 2:49 PM IST

இந்திய, மேற்கு இந்திய தீவுகள், அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

WI vs IND: தொடரை கைப்பற்றுவார்களா தவான் & கோ... இன்று 2ஆவது போட்டி

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: மூன்று ஒருநாள் போட்டிகள், ஐந்து டி20 போட்டிகளை விளையாட இந்தியா அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி டிரினிடாட் தீவுகளின் தலைநகர் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் மைதானத்தில் இன்று (ஜூலை 24) நடைபெறுகிறது.

முன்னதாக, நேற்று முன்தினம் (ஜூலை 22) நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் 'த்ரில்' வெற்றிபெற்று, தொடரில் முன்னிலை பெற்றது. இந்நிலையில், இன்றைய இரண்டாவது போட்டியையும் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும், சொந்த மண்ணில் தொடரை இழப்பதை தவிர்க்க மேற்கு இந்திய தீவுகள் அணியும் உள்ளன.

குவின்ஸ் பார்க் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்றாலும் இந்திய பந்துவீச்சாளர்கள் பார்டனர்ஷிப்பை உடைப்பதில் திணறுகின்றனர்.

சஹால், சிராஜ் ஆகியோர் முதல் போட்டியில் சிறப்பாக பந்து வீசியிருந்தனர். இன்றைய போட்டியிலும் அவர்களின் பங்களிப்பு இந்தியாவுக்கு இன்றியமையாதது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு பின் அணியுடன் இணைந்த ஜடேஜா தற்போது தயாராக உள்ளதால் இன்றைய போட்டியில் அக்சர் படேலுக்கு பதிலாக விளையாட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த போட்டியில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்திய தவான், கில், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரின் பேட்டிங் ஆர்டரில் மாற்றமிருக்க வாய்ப்பில்லை. மிடில் ஆர்டரில் சூர்யகுமார், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் ஆகியோர் இன்று சோபிக்கும்பட்சத்தில் இந்தியா பெரிய ஸ்கோரை எட்ட வாய்ப்புள்ளது.

பிரசித் கிருஷ்ணாவிற்கு பதில் அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகியோருக்கு வாய்ப்புள்ளதா என்பது தவான் - டிராவிட் ஜோடியின் கையில்தான் உள்ளது. மேற்கு இந்திய தீவுகளை பொறுத்தவரை அதே பிளேயிங் லெவனுக்கே வாய்ப்புள்ளது.

உத்தேச பிளேயிங் லெவன்

இந்தியா: ஷிகர் தவான் (கேப்டன்), சுப்மன் கில், ஷ்ரேய்ஸ் ஐயர், சுர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், அக்சர் படேல் (அ) ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சஹால், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா (அ) அர்ஷ்தீப் சிங்.

மேற்கு இந்திய தீவுகள்: ஷாய் ஹோப், கைல் மையர்ஸ், ஷம்மாரா ப்ரூக்ஸ், பிரண்டன் கிங், நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), ரோவ்மான் பாவெல், அகேல் ஹூசைன், ரோமாரியா ஷெப்பேர்டு, அல்ஸாரி ஜோசப், குடகேஷ் மோட்டி, ஜெய்டன் சீல்ஸ்.

இதையும் படிங்க: அடுத்த போட்டிகளில் தங்கம் - நீரஜ் சோப்ரா உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.