ETV Bharat / sports

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ... ஃபீனிக்ஸ் பறவையாக ஃபார்முக்கு திரும்பிய விராட் கோலி!! - virat kohli breaks sachin records

"கோலி முன்னப்போல இல்லப்பா" என்ற உச்சுக்கொட்டல்களுக்கு நடுவே 500வது டெஸ்ட் போட்டியில் விளையாடி, அதிலும் சதம் அடித்து தான் என்றுமே "கிங்" தான் என உரக்கச் சொல்லியிருக்கிறார் விராட் கோலி. இதே வேகத்தில் சென்றால் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் அதிக ரன் சாதனையும் கோலிக்கு வெகுதூரம் இல்லை என்கிறார் ஈடிவி பாரத்தின் கௌதம் கிருஷ்ணா.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 22, 2023, 6:42 PM IST

Updated : Jul 22, 2023, 10:33 PM IST

மீண்டும் ஃபீனிக்ஸ் பறவையாக மாறிய கோலியின் சாதனைகள்

ஹைதராபாத்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் ஆட்டத்தை ரசித்த அவரது ரசிகர்கள் #kingisBack என ஹேஷ்டேக் போட்டு கொண்டாடி வருகின்றனர். சதம் மட்டுமல்ல ரன் மெஷின் கோலி, ரெக்கார்ட் பிரேக்கிங்கிலும் தான் இன்னமும் சோடை போகவில்லை என கூறியுள்ளார். அவரது இந்த போட்டி பல்வேறு புதிய சாதனைகளுக்கு வழி வகுத்துள்ளது.

சாதனை மேல் சாதனை: 500வது சர்வதேச போட்டிக்கு மேல் விளையாடிய 4வது இந்திய வீரராக தனது பெயரை பதிவு செய்துள்ளார் கோலி. முதல் மூன்று இடங்களில் சச்சின் (664), தோனி (535), டிராவிட் (504) ஆகியோர் உள்ளனர். மேலும் சர்வதேச அளவில் இந்த மைல்கல்லை எட்டும் 10வது வீரர் ஆவார். இதுவரை 500வது சர்வதேச போட்டியில் விளையாடிய எந்த நாட்டு வீரரும் அரைசதம் கூட அடித்தது இல்லை. ஆனால் விராட் கோலி சதமடித்துள்ளார் என்பது மற்றொரு மகுடம்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் 5 ஆண்டுகளுக்கு பிறகு கோலி சதமடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் உலகில் அதிக சதமடித்தவர்கள் பட்டியலில் 16வது இடம் பிடித்துள்ள விராட் கோலி டான் பிராட்மேன் சாதனையை சமன் செய்துள்ளார். 100 சதங்கள் கடந்து இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்தியாவிற்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் ஷேவாக்கை பின்னுக்கு தள்ளி கோலி 8642 ரன்களுடன் 5வது இடத்தை பிடித்துள்ளார்.

டெஸ்ட் போட்டியில் மூன்றாவது வீரராக களமிறங்கி அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் கோலி நான்காவது இடம் பிடித்துள்ளார். விராட் கோலி அடித்த 29 சதங்களில் 25 சதங்கள் 3வது விக்கெட்டுக்கு களமிறங்கி அடித்த சதங்களாகும். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கோலி (12) இரண்டாவது இடத்தை முன்னாள் தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் ஜாக் காலிஸுடன் பகிர்ந்துள்ளார். முதலிடத்தை இந்திய முன்னாள் வீரர் கவாஸ்கர் (13) இடம் பெற்றுள்ளார்.

மாஸ்டரை மிஞ்சும் கிங்: விராட் கோலி நேற்று 500வது போட்டியில் சதமடித்ததன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளார். மிகக் குறைவாக 555 இன்னிங்ஸில் 76 சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். அதே வேளையில் சச்சின் 567 இன்னிங்ஸில் 76 சதங்கள் அடித்துள்ளார். சர்வதேச அளவில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் டாப் 10 பட்டியலில் விராட் கோலி 500வது போட்டிக்கு முன்பு வரை டெஸ்ட் போட்டிகளில் 53.48 என்ற சராசரியுடன் 25461 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் சிறந்த சராசரி மற்றும் 50க்கும் மேல் சராசரி கொண்ட ஒரே பேட்ஸ்மென் என்ற சாதனை படைத்துள்ளார்.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஜாக் காலிஸும்(49.1), மூன்றாவது இடத்தில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினும் (48.52) உள்ளனர். மேலும் சச்சின் டெஸ்ட் போட்டிகளில் தனது 29வது சதத்தை நேற்று விராட் கோலி அடித்த இதே போர்ட் ஃஆப் ஸ்பெயின் மைதானத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு அடித்துள்ளார். இந்த தற்செயலான விஷயம் கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் சச்சின் கோலியை ஓப்பிட்டு பார்த்தால் சச்சினை விட 500வது போட்டியில் விளையாடும் விராட் கோலி ரன்கள், சதம், ஸ்டிரைக் ரேட் ஆகிய அனைத்திலும் சச்சினை விட முண்ணனியில் இருக்கிறார். விராட் கோலி இன்னும் குறைந்தது நான்கு ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் விளையாடுவார் என வைத்துக் கொண்டாலும் சச்சினின் அதிக ரன்கள் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: Ashes Test: 3வது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்கள் இழப்பிற்கு 113 ரன்கள்!

Last Updated : Jul 22, 2023, 10:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.