உலகளவில் உள்ள பிரபலங்கள், கரோனா காலத்தில் நடைமுறையில் இருந்த ஊரடங்கின் சோர்வைப் போக்க சமூக வலைதளப் பக்கங்களில் களமாடினர். சமையல் முதல் உடற்பயிற்சி வரை தங்களுக்குத் தெரிந்த அனைத்தையும், தங்களைப் பின்தொடருபவர்களுக்கு காட்சிப்படுத்தினர்.
இந்நிலையில், யார் அதிக ஃபாலோவர்ஸை வைத்திருக்கின்றனர் என்ற ஆய்வுகளும் அவ்வப்போது ட்ரெண்டாகும். அந்த வகையில், தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் 150 மில்லியன் ஃபாலோவர்ஸை கடந்து ஆசிய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
முறையே இரண்டாம் இடத்தை பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தக்கவைத்துள்ளார். மூன்றாம் இடத்தில் இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ராடிட்யா திகா உள்ளார்.