விசாகப்பட்டினம்: 13வது உலகக் கோப்பை தொடர் கடந்த 19ஆம் தேதி முடிவடைந்த நிலையில், அடுத்த மூன்று நாட்களிலேயே இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டி20 தொடர் தொடங்கி உள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியானது நேற்று (நவம்பர். 23) நடைபெற்று முடிந்தது. அதில் இந்திய அணி கடைசி பந்து வரை சென்று த்ரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில், சூர்யகுமார் யாதவ் - இஷான் கிஷனின் பார்ட்னர்ஷிப் இந்திய அணியின் வெற்றிக்கு மிகவும் முக்கியமாக மாறியது. அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 42 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் உள்பட 80 ரன்களை குவித்தார். மறுபக்கம் இஷான் கிஷன் 39 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 5 சிக்சர்கள் என 58 ரன்கள் சேர்த்தார்.
-
Shastri :- "How can you stop sky in this form?"
— CricketTak (@_CricketTak) November 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Hayden :- By telling him it's an Odi WC match.#INDvsAUS #SuryaKumarYadav #JioCinema pic.twitter.com/8hVOt7RoKL
">Shastri :- "How can you stop sky in this form?"
— CricketTak (@_CricketTak) November 23, 2023
Hayden :- By telling him it's an Odi WC match.#INDvsAUS #SuryaKumarYadav #JioCinema pic.twitter.com/8hVOt7RoKLShastri :- "How can you stop sky in this form?"
— CricketTak (@_CricketTak) November 23, 2023
Hayden :- By telling him it's an Odi WC match.#INDvsAUS #SuryaKumarYadav #JioCinema pic.twitter.com/8hVOt7RoKL
இந்நிலையில், இந்திய அணியை கேப்டனாக வழிநடத்திய முதல் போட்டியிலேயே அணிக்கு வெற்றியை பெற்று தந்தது பெருமையாக உள்ளது என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "இந்திய அணியை வழிநடத்தியதில் மகிழ்ச்சி. ஒரு கேப்டனாக அணியின் வெற்றிக்கு பங்களித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
குறிப்பாக இஷான் கிஷன் சிறப்பாக விளையாடினார். அவருடன் அமைந்த பார்ட்னர்ஷிப் நான் அதிரடியாக விளையாட மிகவும் உதவியாக இருந்தது. மேலும், அவரது பங்களிப்பு இந்திய அணியின் வெற்றிக்கு மிகவும் முக்கியமானது. இறுதிக் கட்டத்தில் ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றியை பெற்று தந்தார்.
அழுத்தமான சூழ்நிலையில், அவரது பேட்டிங் செய்ய களம் வந்தார். அதற்கேற்ப பதற்றமின்றி சிறப்பாக செய்ல்பட்டார்" என்றார். இந்த போட்டியில் சூர்யகுமாரின் அதிரடியான ஆட்டத்திற்கு பிறகு அவர் சில ட்ரோல்களுக்கு உள்ளானார். இந்த ட்ரோல்களுக்கொல்லாம், உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் அணிக்கு ரன்கள் தேவையாக இருந்த போது ஒன்றும் செய்யாத இவர், ஒரு சாதாரண டி20 ஆட்டத்தில் அதிரடி காட்டுவதே காரணமாக அமைந்தது.
இதையும் படிங்க: பிபிஎல் தொடரில் இருந்துஆப்கான் நட்சத்திரம் ரசித் கான் விலகல்.. என்ன காரணம் தெரியுமா?