ETV Bharat / sports

TNPL 2022: மதுரை த்ரில் வெற்றி - ஜூலை 4இல் அடுத்த போட்டி...

டிஎன்பிஎல் தொடரில் கோவை அணிக்கு எதிரான போட்டியில், மதுரை அணி கடைசி ஓவர் வரை போராடி, 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

TNPL 2022
TNPL 2022
author img

By

Published : Jul 1, 2022, 8:20 AM IST

திண்டுக்கல்: டிஎன்பிஎல் தொடரில் நேற்று (ஜூன் 30) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில், நெல்லை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தியிருந்தது.

இந்நிலையில், சீசெம் மதுரை பாந்தர்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதிய 8ஆவது லீக் போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, கோவை அணி 20 ஓவர்களில் 151 ரன்களை எடுத்தது. 152 ரன்கள் என்ற சுமாரான இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி, கடைசி ஓவர் வரை சென்று 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்த அணியில் தொடக்க வீரர் ஆதித்யா, ஒன்-டவுணில் களமறிங்கிய பாலசந்தர் அனிருத் ஆகியோர் டக்-அவுட்டான நிலையில், கேப்டன் என்எஸ் சதுர்வேத் 74 (45), அருண் கார்த்திக் 38 (33) ரன்கள் எடுத்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர். இருப்பினும், கடைசி கட்ட ஓவர்களில் இவர்கள் ஆட்டமிழந்த நிலையில், ஜெகதீசன் கௌசிக் 27 (21) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து மதுரை அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

கோவை அணி பந்துவீச்சில் கேப்டன் ஷாருக் கான் 2.5 ஓவர்களில் 14 ரன்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கோவை அணி பேட்டிங்கில் அதிகபட்சமாக முகிலேஷ் 50 (38) ரன்களையும், சுரேஷ் குமார் 46 (22) ரன்களையும் எடுத்தனர். மதுரை அணி கேப்டன் சதுர்வேத் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

புள்ளிகள் பட்டியலில், மதுரை அணி 4 புள்ளிகளுடன் (2 வெற்றி) 2ஆவது இடத்திலும், கோவை அணி புள்ளிகள் ஏதும் இன்றி 6ஆவது இடத்திலும் உள்ளன. டிஎன்பிஎல் தொடரில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு (ஜூலை 1,2,3) போட்டிகள் இல்லை. அடுத்த போட்டி வரும் ஜூலை 4ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெறுகிறது. இப்போட்டியில், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியுடன், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: TNPL 2022: சஞ்சய் யாதவின் மிரட்டலடியில் நெல்லை அணி 'ஹாட்ரிக்' வெற்றி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.