புனே : நடப்பு உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், ஏறத்தாழ 27 ஆண்டுகளுக்கு பிறகு புனே மைதானத்தில் உலக உலக கோப்பை கிரிக்கெட் ஆட்டம் நடைபெறுகிறது.
மகாராஷ்டிர கிரிக்கெட்டின் இதயம் எனக் கருதப்படும் பண்டிட் ஜவஹர்லால் நேரு மைதானத்தில் கடைசியாக கடந்த 1996 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ், கென்யா அணிகள் இடையிலான லீக் ஆட்டம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் வரும் அக்டோபர் 19ஆம் தேதி போட்டி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடத்தப்பட்டாலும், புனே பண்டிட் ஜவஹர்லால் நேரு மைதானத்தில் போட்டி நடத்தப்படவில்லை. இந்நிலையில், நடப்பு உலக கோப்பை சீசனில் வரும் அக்டோபர் 19ஆம் தேதி இந்தியா, வங்காள்தேசம் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் நடைபெறுகிறது.
முதல் முறையாக இந்தியா மட்டும் நடத்துகின்ற உலக கோப்பை என்ற சிறப்பை தவிர்த்து, 27 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் உலக கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி விளையாடுவது என இரட்டிப்பு மகிழ்ச்சியில் மகாராஷ்டிர கிரிக்கெட் ரசிகர்கள் திளைக்கின்றனர். நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் புனே மைதானத்தில் 5 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
5 ஆட்டங்கள் நடைபெறுவதை முன்னிட்டு, மைதானத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இருக்கைகள், மைதானத்தின் கூரை, பார்க்கிங், கழிப்பறை மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாக மைதான நிர்வாகம் தெரிவித்து உள்ளது. போட்டி நடைபெறும் நேரத்தில் பார்வையாளர்கள் எந்தவிதமான அசவுகரியங்களையும் எதிர்கொள்ளாத வகையில் அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மைதானம் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், 10 லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் நடைபெறுகின்றன. இந்தியாவில் வேறெங்கும் இல்லாத அளவில் 10 ஆட்டங்கள் மராட்டிய மாநிலத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. புனே மைதானத்தில் 5 ஆட்டங்கள் நடைபெறும் நிலையில், மீதமுள்ள 5 ஆட்டங்கள் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இந்தியா வரும் அக்டோபர் 19ஆம் தேதி புனேவில் வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க : LIVE : World Cup Cricket 2023 : நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு!