சிட்னி: டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான்-தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இன்று (நவ. 3) மோதின. முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் பேட்டிங்கை தேர்வை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கி பாகிஸ்தான் வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்களை எடுத்தனர். அதிகபட்சமாக ஷதாப் கான் 22 பந்துகளுக்கு 52 ரன்களை குவித்தார்.
அதேபோல இப்திகார் அகமது 35 பந்துகளுக்கு 51 ரன்களையும், முகமது ஹாரிஸ் 11 பந்துகளுக்கு 28 ரன்களையும் எடுத்தனர். மறுப்புறம் பந்து வீச்சில் வெய்ன் பார்னெல், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். அதைத்தொடர்ந்து 186 ரன்கள் வெற்றி இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது. 9 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 69 ரன்களை எடுத்தது.
அந்த நேரத்தில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 14 ஓவர்களாகவும், வெற்றி இலக்கு 142ஆகவும் குறைக்கப்பட்டது. இருப்பினும் தென்னாப்பிரிக்க அணி 14 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அதிகபட்சமாக கேப்டன் டெம்பா பவுமா 19 பந்துகளுக்கு 36 ரன்களையும், ஐடன் மார்க்ரம் 14 பந்துகளுக்கு 20 ரன்களையும் எடுத்தனர். மறுப்புறம் பந்துவீச்சில் ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளையும், ஷதாப் கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
இதையும படிங்க: டி20 உலகக்கோப்பையில் புதிய சாதனை படைத்துள்ள கோலி