ETV Bharat / sports

"டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் மோதுவதையே அனைவரும் விரும்புகிறார்கள்" - ஷேன் வாட்சன் கருத்து

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுவதையே அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

T20
T20
author img

By

Published : Nov 8, 2022, 3:54 PM IST

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நாளை (நவ.9) நடைபெறவுள்ள அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தானும் நியூசிலாந்தும் மோதுகின்றன. வரும் 10ஆம் தேதி நடைபெறவுள்ள மற்றொரு அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

அரையிறுதிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றது கிரிக்கெட் ரசிகர்களிடையே உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுவதையே அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "இறுதிப்போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுவதைப் பார்க்கவே அனைவரும் விரும்புகிறார்கள். 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அதே போன்ற விறுவிறுப்பான போட்டியை மீண்டும் எதிர்பார்க்கிறார்கள்.

எல்லாப் போட்டிகளிலும் ஒரு அணி வரிசையின் குறுக்கே விழுந்து, எப்படியாவது இறுதிப்போட்டிக்குள் நுழைந்து, பின்னர் வெற்றி பெறும். குறிப்பாக இந்த தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழையும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதற்குக் காரணம் சில ஆட்டங்களில் அவர்கள் விளையாடிய விதம். தற்போது அவர்கள் மீது எதிர்பார்ப்பு இல்லாததால், அந்த அணிக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. இது நியூசிலாந்து அணிக்கு மிகவும் ஆபத்தாக இருக்கும்" என்று கூறினார்.

இதையும் படிங்க:அக்டோபர் மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.