ETV Bharat / sports

'மீண்டு வர வாழ்த்தியவர்களுக்கு நன்றி'- கிரிக்கெட் வீரர் நடராஜன் - மீண்டு வர வாழ்த்தியவர்களுக்கு நன்றி

முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

நடராஜன்
நடராஜன்
author img

By

Published : Apr 27, 2021, 10:33 PM IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வந்த நடராஜன் முழங்கால் காயம் காரணமாக கடந்த 2 போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். அவருக்கு பதிலாக கலீல் அஹமது அணியில் சேர்க்கப்பட்டார். நடராஜன் அணிக்கு எப்போது திரும்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் நடப்பு ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாட மாட்டார் என தகவல் வெளியானது.

இதையடுத்து, நடராஜன் சிகிச்சைக்காக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்ல உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், தனக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக நடராஜன் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நடராஜன்
நடராஜன்

அதில்,'இன்று முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். எனக்கு கனிவோடு சிகிச்சையளித்து கவனித்துக் கொண்ட மருத்துவக் குழு, அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மேலும் பிசிசிஐ மற்றும் நான் விரைவில் மீண்டு வர பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி'என குறிப்பிட்டிருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.