சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடரின் ஐந்தாவது சீசன் கடந்த ஜூலை 19ஆம் தேதி தொடங்கியது. இத்தொடரின் லீக் போட்டிகள் நேற்று முன்தினம் (ஆக.8) நிறைவடைந்தது. அதன் முடிவில் திருச்சி, சென்னை, திண்டுக்கல், கோவை ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே முதல் நான்கு இடங்களை பிடித்து ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.
இந்நிலையில், குவாலிஃபயர்-1 என்னும் தகுதிச்சுற்று போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் இன்று (ஆக.10) மோதுகின்றன.
வீக்கான ஓப்பனிங்
இப்போட்டியில், டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து சென்னை அணி பேட்டிங்கை தொடங்கியது. இதன்மூலம், சென்னை அணிக்கு கௌசிக் காந்தி, நாராயணன் காந்தி ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினார். கேப்டன் கௌசிக் காந்தி 1(3) ரன்னிலும், ஜெகதீசன் 14(13) ரன்னிலும் சரவணன் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
மூன்றாம் விக்கெட் ஜோடி
அதன்பின் களமிறங்கிய சசிதேவ், ராதாகிருஷ்ணனோடு ஜோடி சேர்ந்தார். சசிதேவ் சிங்கில்ஸ், டபூள்ஸ் எடுக்க, ராதாகிருஷ்ணன் பவுண்டரிகளை பறக்கவிட்டார். இந்நிலையில், சசிதேவ் ஒரு சிக்ஸர் உள்பட 23(29) ரன்களில் மதிவண்ணனிடம் வீழ்ந்தார். இதையடுத்து ராஜகோபால் சதீஷ் களமிறங்க , ராதாகிருஷ்ணன் தான் சந்தித்த 35ஆவது பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார்.
இந்த ஸ்கோர் போதுமா...
இறுதி 5 ஓவர்களில் 47 ரன்களை இந்த ஜோடி சேர்த்தது. இதன்மூலம் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் மூன்று 153 ரன்களைச் சேர்த்தது. ராதாகிருஷ்ணன் 82(54) ரன்களிலும், ராஜகோபால் சதீஷ் 29(22) ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
திருச்சி அணி, 154 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்த அமித் சாத்விக், சந்தோஷ் ஷிவ் ஆகியோரை களமிறக்கியது. சந்தோஷ் ஷிவ் 5(4) ரன்களுக்கும், அமித் சாத்விக் 9(13) ரன்களுக்கும் ஆட்டமிழந்ததை அடுத்து, தற்போது திருச்சி அணி 7 ஓவர்களில் 55/3 என்ற நிலையில் விளையாடி வருகிறது.
இதையும் படிங்க: 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஐசிசி நம்பிக்கை