சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் ஐந்தாவது சீசன் கடந்த திங்கள்கிழமை (ஜூலை 19) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலகலமாகத் தொடங்கியது. இதுவரை 7 ஆட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், வார இறுதி நாளான இன்று (ஜூலை 25) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன.
சீசெம் மதுரை பாந்தர்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதும் எட்டாவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி, மதுரை அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
பிளேயிங் XI
-
Toss: Ruby Trichy Warriors have won the toss and elected to bowl first!
— TNPL (@TNPremierLeague) July 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
📺Star Sports Tamil/2/2HD/Disney+Hotstar#SMPvRTW #ShriramCapitalTNPL2021 #NammaOoruNammaGethu pic.twitter.com/vL0aUJaFhO
">Toss: Ruby Trichy Warriors have won the toss and elected to bowl first!
— TNPL (@TNPremierLeague) July 25, 2021
📺Star Sports Tamil/2/2HD/Disney+Hotstar#SMPvRTW #ShriramCapitalTNPL2021 #NammaOoruNammaGethu pic.twitter.com/vL0aUJaFhOToss: Ruby Trichy Warriors have won the toss and elected to bowl first!
— TNPL (@TNPremierLeague) July 25, 2021
📺Star Sports Tamil/2/2HD/Disney+Hotstar#SMPvRTW #ShriramCapitalTNPL2021 #NammaOoruNammaGethu pic.twitter.com/vL0aUJaFhO
திருச்சி அணியில் முகுந்த் நீக்கப்பட்டு முகமது அட்னான் கான் சேர்க்கப்பட்டுள்ளார். மதுரை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
சீசெம் மதுரை பாந்தர்ஸ்: அருண் கார்த்திக் (கே), கே. ராஜ்குமார், பி. அனிருத் சிதாராம், என்.எஸ். சதுர்வேத், ஜெகன்நாதன் கௌசிக், எம். ஷாஜகான், ஆர். மிதுன், ராமலிங்கம் ரோஹித், ஆர். சிலம்பரசன், கிரண் ஆகாஷ், ஆஷிக் ஸ்ரீநிவாஸ்.
ரூபி திருச்சி வாரியர்ஸ்: ஆதித்யா கணேஷ், அமித் சாத்விக், ஆகாஷ் சும்ரா, ஆண்டனி தாஸ், முகமது அட்னான் கான், சரவணன் குமார், ரஹில் ஷா(கே), நீதிஷ் ராஜகோபால், சுமந்த் ஜெயின், மதிவண்ணன், சுனில் சாம்.
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸ் 2ஆவது சுற்றில் வெற்றியை ருசித்த மணிகா பத்ரா