மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரை முடித்துவிட்டு இந்திய அணியினர் துபாயிலிருந்து நேற்று முன்தினம் (நவ. 14) இரவு மும்பை வந்தனர்.
இந்நிலையில், இந்திய அணி ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிடம்(Hardik Pandya) இருந்து முறையான ரசீது இல்லாத காரணத்தால் இரண்டு கைக்கடிகாரங்களை மும்பை சுங்கத்துறையினர்(mumbai Customs department) பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ஐந்து கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, கடந்தாண்டு ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் குர்னால் பாண்டியா தங்கம் மற்றும் பிற விலைமதிக்கத்தக்க பொருள்களை மறைத்து வைத்திருந்தாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: T20 WC: பீர் ஊற்ற வேண்டிய இடமாடா அது... ஆஸி., வீரர்கள் செய்த காரியம்!