வங்கதேச அணியின் டி20 கேப்டன் முஹமதுல்லா. இவர் பிஎஸ்எல் தொடரில் முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். பிஎஸ்எல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிகளில் ஆடுவதற்காக முஹமதுல்லா அழைக்கப்பட்ட நிலையில், முஹமதுல்லாவுக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் இருந்து வெளியேறுபவர்கள் கரோனா இல்லை என்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்பதால், முஹமதுல்லா பிஎஸ்எல் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
கரோனா உறுதியான உடனேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட முஹமதுல்லா, அடுத்ததாக கரோனா தொற்றுக்கான இரண்டாவது பரிசோதனையை மேற்கொள்ளவுள்ளார். நவம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில் பிஎஸ்எல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐபிஎல் ஓவர்... ஆஸி. தொடருக்கு தயாராகும் கோலி!