துபாய்: ஏழாவது ஐசிசி டி20 உலக்கோப்பை தொடர் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கியது. தகுதிச்சுற்றுப் போட்டிகள் அக்.22ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், குரூப் 'ஏ' பிரிவில் இருந்து இலங்கை, நமிபியா அணிகளும், குரூப் 'பி' பிரிவில் ஸ்காட்லாந்து, வங்கதேசம் அணிகளும் 'சூப்பர் 12' சுற்றுக்கு தகுதிபெற்றன.
இதன்பின்னர், 'சூப்பர் 12' சுற்றுப்போட்டிகள் அக்.23ஆம் தேதி தொடங்கின. தொடரின் 18ஆவது போட்டியில் முதல் பிரிவில் இடம்பெற்றுள்ள மேற்கு இந்திய தீவுகள் - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று (அக். 26) மோதின.
திணறிய வெஸ்ட் இண்டீஸ்
துபாய் ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. முதலில் பேட்டிங் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை எடுத்தது.
-
End of the innings!
— T20 World Cup (@T20WorldCup) October 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
West Indies end up with a total of 143/8.
Which side will clinch their first victory of the tournament? #T20WorldCup | #SAvWI | https://t.co/q4Grni6krE pic.twitter.com/FyloGjySgC
">End of the innings!
— T20 World Cup (@T20WorldCup) October 26, 2021
West Indies end up with a total of 143/8.
Which side will clinch their first victory of the tournament? #T20WorldCup | #SAvWI | https://t.co/q4Grni6krE pic.twitter.com/FyloGjySgCEnd of the innings!
— T20 World Cup (@T20WorldCup) October 26, 2021
West Indies end up with a total of 143/8.
Which side will clinch their first victory of the tournament? #T20WorldCup | #SAvWI | https://t.co/q4Grni6krE pic.twitter.com/FyloGjySgC
மே.இ. தீவுகள் அணியில் அதிகபட்சமாக லீவிஸ் 56 (35) ரன்களும், கேப்டன் பொல்லார்ட் 26 (20) ரன்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் டுவெய்ன் பிரிடோரியஸ் 3 விக்கெட்டுகளையும், கேசவ் மகராஜ் 2 விக்கெட்டுகளையும், நோர்க்கியா, ரபாடா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
144 என்ற வெற்றி இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கிய நிலையில், தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் பவுமா 2 ரன்களில் அவுட்டானார். ஆரம்பத்திலேயே விக்கெட்டை பறிகொடுத்த நிலையில், அடுத்து களமிறங்கிய வான்டெர் துஸ்சென் ரீசா ஹென்ட்ரிக்சுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆட்டத்தின் 10ஆவது ஓவரில் ஹென்ட்ரிக்ஸ் 39 (30) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மார்க்ரம் அதிரடியாக விளையாடி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தார்.
ஆட்டத்தின் 19ஆவது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்து மார்க்ரம் தனது அரைசதத்தை பதிவுசெய்தார். அடுத்த பந்தில் சிங்கில் அடித்து மார்க்ரம் தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றித் தேடிதந்தார் .
-
A blistering fifty from Aiden Markram 💥#T20WorldCup | #SAvWI | https://t.co/q4GrnhOJA6 pic.twitter.com/VTL2wSxuoV
— T20 World Cup (@T20WorldCup) October 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A blistering fifty from Aiden Markram 💥#T20WorldCup | #SAvWI | https://t.co/q4GrnhOJA6 pic.twitter.com/VTL2wSxuoV
— T20 World Cup (@T20WorldCup) October 26, 2021A blistering fifty from Aiden Markram 💥#T20WorldCup | #SAvWI | https://t.co/q4GrnhOJA6 pic.twitter.com/VTL2wSxuoV
— T20 World Cup (@T20WorldCup) October 26, 2021
ஆட்ட நாயகன் - நோர்க்கியா
தென் ஆப்பிரிக்கா சார்பில் வான்டெர் துஸ்சென் 43 (51) ரன்களுடனும், மார்க்ரம் 51 (26) ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 4 ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தி வெறும் 17 ரன்களை கொடுத்த தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சாளர் நோர்க்கியா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரலியாவிடம் தோல்வியடைந்த நிலையில், இன்றைய இரண்டாவது போட்டியி மே.இ. தீவுகள் அணியை வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
மே.இ. தீவுகள் அணி தனது முதல் போட்டியில் இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்த நிலையில், இன்றையப் போட்டியிலும் தோல்வியை தழுவி பரிதாபமான நிலையில் உள்ளது .
நியூசிலாந்து பேட்டிங்
-
Sheer pace 🔥
— T20 World Cup (@T20WorldCup) October 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Haris Rauf makes an immediate impact, bowling Guptill out for 17.#T20WorldCup | #PAKvNZ | https://t.co/rpw034kJXO pic.twitter.com/OZwsTsnFNi
">Sheer pace 🔥
— T20 World Cup (@T20WorldCup) October 26, 2021
Haris Rauf makes an immediate impact, bowling Guptill out for 17.#T20WorldCup | #PAKvNZ | https://t.co/rpw034kJXO pic.twitter.com/OZwsTsnFNiSheer pace 🔥
— T20 World Cup (@T20WorldCup) October 26, 2021
Haris Rauf makes an immediate impact, bowling Guptill out for 17.#T20WorldCup | #PAKvNZ | https://t.co/rpw034kJXO pic.twitter.com/OZwsTsnFNi
சார்ஜாவில் நடைபெறும் மற்றொரு போட்டியில் இரண்டாவது பிரிவில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. தற்போது, நியூசிலாந்து அணி 14 ஓவர்களில் 95/4 என்ற நிலையில் பேட்டிங் செய்து வருகிறது.
இதையும் படிங்க: கேலிக்குள்ளான முகம்மது ஷமி.. கை கொடுக்கும் ராகுல் காந்தி..!