ETV Bharat / sports

கோப்பையை வென்று நாடுதிரும்பிய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணிக்கு உற்சாக வரவேற்பு! - சச்சின் சிவா

டிபிஎல் மாற்றுத்திறனாளிகளுக்கான டி20 கிரிக்கெட் தொடரை வென்று, நாடு திரும்பிய சென்னை அணிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் கேப்டன் சச்சின் சிவா, சச்சின் சிவா, SACHIN SIVA
tn_che_01_disabled cricket team_viaual_script_7208368
author img

By

Published : Apr 18, 2021, 4:38 PM IST

Updated : Apr 18, 2021, 7:56 PM IST

சென்னை: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற திவ்யாங் பிரீமியர் லீக் (டிபிஎல்) என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான டி20 கிரிக்கெட் தொடர் நடந்தது. இத்தொடரில் தமிழ்நாட்டு அணியான சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் கிரிக்கெட் அணி கேப்டன் சச்சின் சிவா கூறுகையில், "மாற்றுத்திறனாளிகளுக்கான டி20 கிரிக்கெட் தொடர் முதன்முறையாக துபாயில் நடந்தது. கரோனா காரணமாக ஏப்ரல் 8ஆம் தேதி தொடங்க வேண்டிய ஆட்டம் ஏப்ரல் 13ஆம் தேதி தொடங்கியது. இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியுடன் மோதிய சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி 24 ரன் வித்தியாசத்தில் கோப்பை வென்றது.

நாடுதிரும்பிய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணிக்கு உற்சாக வரவேற்பு

தமிழ்நாட்டை கவுரவப்படுத்தும் வகையில் கோப்பையை வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் போட்டிக்கு செல்ல நடிகர்கள் கமல் ஹாசன், சிவகார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் உள்பட உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இந்தியாவில் இருந்து கொல்கத்தா, சென்னை, மும்பை, குஜ்ராத், டெல்லி, ராஜஸ்தான் ஆகிய 6 அணிகள் இத்தொடரில் பங்கேற்றன. இந்தியாவிற்காக 5 ஆண்டுகளாக விளையாடிக் கொண்டிருக்கிறேன். இந்தியாவிற்காக புதிய வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முதலமைச்சரை சந்திக்க ஆசைப்படுகிறோம். வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம். இந்த வெற்றிக்கு ஊக்கத் தொகையினை அரசு வழங்க வேண்டும்" என்றார்.

இந்த டிபிஎல் தொடரில் சென்னை சூப்பர் ஸ்டார் அணியின் சார்பாக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். அரியலூர் மாவட்டத்தில் இருந்து 4 வீரர்களும், மதுரை மாவட்டத்திலிருந்து 4 வீரர்களும், ஊட்டியிலிருந்து ஒரு வீரரும், நாமக்கல், ஈரோடு, கோபிசெட்டிபாளையம் ஆகிய ஊர்களில் இருந்து ஒரு வீரரும் கோயமுத்தூரிலிருந்து ஒரு வீரரும் கலந்து கொண்டனர்.

இந்த டிபிஎல் தொடரானது மூன்று மூன்று அணிகளாக ஏ, பி என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் நடத்தப்பட்டது. இதில் ஏ பிரிவில் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணியும், பி பிரிவில் கொல்கத்தா நைட் பைட்டர்ஸ் அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி, கொல்கத்தா நைட் பைட்டர்ஸ் அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது.

சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணியின் ஆல்ரண்டர் கைலாஷ் இறுதிபோட்டியில் ஆட்டநாயகன் விருதையும், தொடர்நாயகன் விருதையும் பெற்றார். போட்டியின் வெற்றிக்கொப்பையை இந்தியா மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சங்க செயலாளர் ஹாரூன் ரஷீத், ஷார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் மேலாளர் மஜார் கான் ஆகியோர் வழங்க சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணித்தலைவர் சச்சின் சிவா பெற்று கொண்டார்.

இதையும் படிங்க: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற ரவி, காயத்தால் பூனியா விலகல்

Last Updated : Apr 18, 2021, 7:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.