சென்னை: டிஎன்பிஎல் தொடரின் ஐந்தாவது சீசன் இறுதிப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் நேற்று (ஆக. 15) மோதின.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 183 ரன்களை எடுத்தது. ஜெகதீசன் அதிகபட்சமாக 90 ரன்களை குவித்தார். இதையடுத்து களமிறங்கிய திருச்சி அணி முதலில் சறுக்கினாலும் இறுதி ஓவர்வரை போராடியது.
திருச்சி அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சாய் கிஷார் பந்துவீச வந்தார். சாய் கிஷார் அசத்தலாக பந்துவீசியதால் திருச்சி அணி அந்த ஓவரில் 4 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதனால், 8 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. 2017, 2019 டிஎன்பிஎல் தொடருக்கு பிறகு மூன்றாவது முறையாக சென்னை அணி கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடதக்கது.