பெங்களூரு : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், அதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரைஇறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இந்நிலையில், நேற்று (நவ. 13) நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதிக் கொண்டன. இதில் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தொடர்ந்து, நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறந்த பீல்டருக்கான பதக்கம் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவிற்கு வழங்கப்பட்டது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் முன்னிலையில் சிறந்த பீல்டருக்கான விருதை சூர்யகுமார் யாதவிற்கு இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் வழங்கினார்.
-
When the "Decision is pending" & you get the groundsmen for the BIG reveal 👌🏻🫡
— BCCI (@BCCI) November 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Heartwarming & innovative from #TeamIndia in this edition of the Best fielder award🏅 #CWC23 | #MenInBlue | #INDvNED
WATCH 🎥🔽 - By @28anand
">When the "Decision is pending" & you get the groundsmen for the BIG reveal 👌🏻🫡
— BCCI (@BCCI) November 13, 2023
Heartwarming & innovative from #TeamIndia in this edition of the Best fielder award🏅 #CWC23 | #MenInBlue | #INDvNED
WATCH 🎥🔽 - By @28anandWhen the "Decision is pending" & you get the groundsmen for the BIG reveal 👌🏻🫡
— BCCI (@BCCI) November 13, 2023
Heartwarming & innovative from #TeamIndia in this edition of the Best fielder award🏅 #CWC23 | #MenInBlue | #INDvNED
WATCH 🎥🔽 - By @28anand
களத்தில் முழு ஒத்துழைப்புடன் விளையாடும் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த பீல்டருக்கான பதக்கம் உந்துதலாக இருக்கும் என இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் தெரிவித்தார். ஒரு கேட்ச்சாக மட்டும் இந்த பதக்கம் வழங்கப்படுவதில்லை என்றும் 50 ஓவர் வடிவில் வீசப்படும் 300 பந்துகளில் இருக்கும் சிறந்த பீல்டிங்கிற்காக வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சதத்தின் உதவியுடன் 410 ரன்களை குவித்தது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி ஆகியோர் அரை சதம் விளாசி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்த உதவியாக விளங்கினர்.
லீக் சுற்றில் ஆடிய 9 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, தனது முதலாவது அரையிறுதியில் வரும் நவம்பர் 15ஆம் தேதி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க : சிராஜிற்கு ஏற்பட்ட காயம்; மீண்டும் விளையாடும் வாய்ப்பு கிடைக்குமா? பயிற்சியாளர் கூறுவது என்ன?