ETV Bharat / sports

South Africa Vs Srilanka : தென் ஆப்பிரிக்கா 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!.. போராடி தோற்ற இலங்கை!

World Cup 2023 : உலக கோப்பை 4வது லீக் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

South Africa won by 102 runs
South Africa won by 102 runs
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2023, 2:16 PM IST

Updated : Oct 7, 2023, 10:34 PM IST

டெல்லி : ஐசிசி உலக கோப்பை தொடரின் 4வது லீக் ஆட்டம் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்காவின் இன்னிங்ஸை தொடங்க குயின்டன் டி காக் மற்றும் கேப்டன் தேம்பா பாவுமா களம் இறங்கினர்.

கேப்டன் பாவுமா 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின் வந்த ராஸ்ஸி வான் டெர் டுசென், டி காக்குடன் ஜோடி சேர்ந்து ரன்களை குவித்தார். சிறப்பாக விளையாடிய இருவரில் முதலில் டி காக் 83 பந்துகளில் சதம் விளாசினார். அதற்கு அடுத்த பந்தை சிக்சர் அடிக்க முயன்று கேட்ச்சாகி டி காக் அவுட்டானார்.

அதனை தொடர்ந்து சதம் அடித்த வான் டெர் டுசென் 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் எய்டன் மார்க்ராம் மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடி அதிரடி காட்ட தென் ஆப்பிரிக்காவின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. அணியின் ஸ்கோர் 342 எட்டிய நிலையில் கிளாசென் 32 ரன்களுக்கு வெளியேறினார்.

தொடர்ந்து அதிரடி காட்டிய மார்க்ராம் 49 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் உலக கோப்பை வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை மார்க்ராம் பெற்றார். தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில், 428 ரன்கள் குவித்தது. இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக தில்ஷான் மதுஷங்க 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து, 428 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியில், தொடக்க வீரரான பதும் நிஸ்ஸங்க டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து குசல் பெரேரா 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஒரு பக்கம் அதிரடியும், ஒரு பக்கம் விக்கெட்டை சரிவையும் சீரான இடைவெளியில் இலங்கை அணி சந்தித்தது.

இலங்கை அணியின் பேட்ஸ்மேனும் விக்கெட் கீப்பருமான குசல் மெண்டிஸ் 42 பந்துகளில் 8 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சமரவிக்ரம 23, அசலங்கா 79, தனஞ்சய டி சில்வா 11, தசுன் ஷனகா 68, கசுன் ராஜித 33 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் இலங்கை அணி 44 புள்ளி 5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா அணி சார்பாக ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டும், ரபாடா, மகாராஜ் மற்றும் மார்கோ ஜான்சன் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். லுங்கி என்கிடி அவரது பங்கிற்கு 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

இதையும் படிங்க: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உலகக் கோப்பை போட்டிகள்.. சென்னைவாசிகள் கவனிக்க வேண்டியது என்ன?

Last Updated : Oct 7, 2023, 10:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.