ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கிளீன் ஸ்விங், துல்லிய கணிப்புக்குப் பெயர் பெற்ற நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் முதன்முதலாக 2004ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இவர் 130 முதல் 140 கி.மீ. வேகத்தில் பந்தை ஸ்விங் செய்யும் அபாரத் திறமை கொண்டவர்.
தனது நாட்டிற்காக 125 ஒரு நாள் சர்வதேச போட்டிகளிலும், 47 டி20 போட்டிகளிலும், 93 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 439 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இலங்கைக்கு டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இதையடுத்து அவர், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
-
Announcement. pic.twitter.com/ZvOoeFkp8w
— Dale Steyn (@DaleSteyn62) August 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Announcement. pic.twitter.com/ZvOoeFkp8w
— Dale Steyn (@DaleSteyn62) August 31, 2021Announcement. pic.twitter.com/ZvOoeFkp8w
— Dale Steyn (@DaleSteyn62) August 31, 2021
இந்த நிலையில் இன்று அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று நான் மிகவும் விரும்பும் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன். இது கசப்பான தருணம்.
குடும்பம் முதல் சக வீரர்கள், ஊடகவியலாளர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன்.
எனது கிரிக்கெட் வாழ்க்கை ஒரு நம்பமுடியாத பயணம். 20 ஆண்டுகளாக பயிற்சி, போட்டிகள், பயணம், வெற்றி, தோல்வி, சாதனை, பின்னடைவு, மகிழ்ச்சி, துக்கம், சகோதரத்துவம் என்று சொல்ல நிறைய நினைவுகள் உள்ளன" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பந்தை எதிர்கொள்ள சற்று பயமாக இருந்தது - விராட் கோலி!