பார்ல் : இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 தொடரிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்ற நிலையில், அதில் 1-க்கு 1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கியது. முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியும், தொடர்ந்து டிசம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றது.
இதனால் தொடர் 1-க்கு 1 என்ற கணக்கில் உள்ளது. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (டிச. 21) பார்ல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ராம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
-
🚨 Toss Update 🚨
— BCCI (@BCCI) December 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
South Africa win the toss and elect to bowl in the ODI series decider.
Follow the Match ▶️ https://t.co/nSIIL6gzER#TeamIndia | #SAvIND pic.twitter.com/m5dUtodf4t
">🚨 Toss Update 🚨
— BCCI (@BCCI) December 21, 2023
South Africa win the toss and elect to bowl in the ODI series decider.
Follow the Match ▶️ https://t.co/nSIIL6gzER#TeamIndia | #SAvIND pic.twitter.com/m5dUtodf4t🚨 Toss Update 🚨
— BCCI (@BCCI) December 21, 2023
South Africa win the toss and elect to bowl in the ODI series decider.
Follow the Match ▶️ https://t.co/nSIIL6gzER#TeamIndia | #SAvIND pic.twitter.com/m5dUtodf4t
இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் என்பதால் இந்திய வீரர்கள் கடுமையாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கடந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு பேட்டிங் சற்று பின்னடைவாக அமைந்தது. நிலைத்து நின்று விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய வீரர்கள் சோபிக்கத் தவறியது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
பந்துவீச்சிலும் இந்திய வீரர்கள் சற்று மெனக்கிட வேண்டிய சூழலில் உள்ளனர். வெற்றிக்காக இன்றைய ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்பு துளியும் பஞ்சம் இருக்காது என்பதில் சந்தேகமில்லை.
போட்டிக்கான இரு அணி வீரர்களின் பட்டியல் :
இந்தியா : ரஜத் படிதார், சாய் சுதர்சன், திலக் வர்மா, கே.எல் ராகுல் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன், ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார்,
-
A look at #TeamIndia's Playing XI for the third and final ODI 👌👌
— BCCI (@BCCI) December 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Rajat Patidar is set to make his ODI debut 👏👏
Follow the Match ▶️ https://t.co/nSIIL6gzER#TeamIndia | #SAvIND pic.twitter.com/3qHkp6M32u
">A look at #TeamIndia's Playing XI for the third and final ODI 👌👌
— BCCI (@BCCI) December 21, 2023
Rajat Patidar is set to make his ODI debut 👏👏
Follow the Match ▶️ https://t.co/nSIIL6gzER#TeamIndia | #SAvIND pic.twitter.com/3qHkp6M32uA look at #TeamIndia's Playing XI for the third and final ODI 👌👌
— BCCI (@BCCI) December 21, 2023
Rajat Patidar is set to make his ODI debut 👏👏
Follow the Match ▶️ https://t.co/nSIIL6gzER#TeamIndia | #SAvIND pic.twitter.com/3qHkp6M32u
தென் ஆப்பிரிக்கா : டோனி டி ஸோர்ஸி, ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸென், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், வியான் முல்டர், கேசவ் மகராஜ், நான்ட்ரே பர்கர், லிசாட் வில்லியம்ஸ், பியூரன் ஹென்ட்ரிக்ஸ், ரீசா ஹென்ட்ரிக்ஸ்.
இதையும் படிங்க : மீண்டும் சிக்கலில் ராகுல் காந்தி! சர்ச்சை பேச்சு விவகாரத்தில் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு! தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை என்ன?