கொல்கத்தா : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் அதில், இந்தியா, தென் ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் நாக் அவுட் சுற்றான அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கான இரண்டாவது அணியை தேர்வு செய்யும் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (நவ. 16) நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தென் ஆப்பிரிக்க அணியின் இன்னிங்சை கேப்டன் டெம்பா பவுமா, குயின்டன் டி காக் ஆகியோர் தொடங்கினர். தொடக்கமே தென் ஆப்பிரிக்க அணிக்கு அதிர்ச்சிகரமாக அமைந்தது. கேப்டன் டெம்பா பவுமா, மிட்செல் ஸ்டார்க் பந்தில் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் 3 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தொடக்க ஜோடி இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறியதால் தென் ஆப்பிரிக்காவின் ரன் வேகத்தை ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் எளிதில் கட்டுப்படுத்தினர். ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க வீரர்கள் கடுமையாக திணறினர். எய்டன் மார்க்ரம் 10 ரன், அவரைத் தொடர்ந்து ராஸ்ஸி வேன் டர் துஸ்சென் 6 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
14 ஓவர்களை கடந்த நிலையில் திடீரென மழை குறுக்கிட்டது. இதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. சிறிதுநேர இடைவெளிக்கு பின்னர் மீண்டும் போட்டி தொடங்கியது. ஒருபுறம் தென் ஆப்பிரிக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து விக்கெட் அணிவகுப்பு நடத்தி வந்தாலும் மறுபுறம் டேவிட் மில்லர் நிலைத்து நின்று விளையாடி அணி 200 ரன்களை கடக்க உதவினார்.
-
South Africa in deep peril before rain halts play 👀#CWC23 | #SAvAUShttps://t.co/eQFviwYmYS pic.twitter.com/R2vwIgHHey
— ICC (@ICC) November 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">South Africa in deep peril before rain halts play 👀#CWC23 | #SAvAUShttps://t.co/eQFviwYmYS pic.twitter.com/R2vwIgHHey
— ICC (@ICC) November 16, 2023South Africa in deep peril before rain halts play 👀#CWC23 | #SAvAUShttps://t.co/eQFviwYmYS pic.twitter.com/R2vwIgHHey
— ICC (@ICC) November 16, 2023
சதம் விளாசிய டேவிட் மில்லர் (101 ரன்) அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். மறுபுறம் உஸ்மான் கவாஜா 4 ரன், ஜெரால்டு கோட்ஸ்லி 19 ரன், மார்கோ ஜான்சன் டக் அவுட் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 49 புள்ளி 4 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
-
A stellar century from David Miller against all odds 👊@mastercardindia Milestones 🏏#CWC23 | #SAvAUS pic.twitter.com/mHnF6PbsE7
— ICC (@ICC) November 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A stellar century from David Miller against all odds 👊@mastercardindia Milestones 🏏#CWC23 | #SAvAUS pic.twitter.com/mHnF6PbsE7
— ICC (@ICC) November 16, 2023A stellar century from David Miller against all odds 👊@mastercardindia Milestones 🏏#CWC23 | #SAvAUS pic.twitter.com/mHnF6PbsE7
— ICC (@ICC) November 16, 2023
தப்ரைஸ் ஷம்சி 1 ரன்னுடன் கடைசி வரை களத்தில் நின்றார். ஆஸ்திரேலிய அணியில் அபாரமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ஜோஸ் ஹாசில்வுட், டிராவிஸ் ஹேட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 213 ரன்கள் எடுத்தால் இறுதி போட்டிக்கு நுழைய முடியும்.
இதையும் படிங்க : South Africa Vs Australia : மழையால் ஆட்டம் பாதிப்பு! தென் ஆப்பிரிக்கா திணறல்!