ஜோகன்னஸ்பர்க்: ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி முழுவதும் தென் ஆப்பிரிக்கா அணி ஆதிக்கம் செலுத்தியது. இதனால் அந்த அணி கோப்பையை வெல்லும் என பலர் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்த அணியை கோப்பையை வெல்லாமல் வெளியேறியது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் வருத்தமே.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா அணி இந்தியா அணியுடன் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் 10ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. தற்போழுது தென் ஆப்பிரிக்காவுக்கான அணியை அந்நாட்டு நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஒருநாள் உலகக் கோப்பையில் டெம்பா பவுமா கேப்டன்சியும், பேட்டிங்கும் விமர்சத்திற்கு உள்ளானது. இதனால் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கு எய்டன் மார்க்ரம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெம்பா பவுமா டெஸ்ட் தொடருக்கு மட்டுமே கேப்டனாக இடம் பெற்றுள்ளார்.
மூன்று வடிவத்திற்கும் அறிவிக்கப்பட்ட இந்த அணிகளில் பல இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். எதிர்வரும் டி20 உலகக் கோப்பையை மனதில் கொண்டு டி20 தொடருக்கான அணிகள் அமைக்கப்பட்டதாக தெரிகிறது. விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் இடம் பெற்றுள்ளார்.
-
South Africa have named their squads for the multi-format home series against India 👇#SAvIND https://t.co/xB7pW9VbuI
— ICC (@ICC) December 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">South Africa have named their squads for the multi-format home series against India 👇#SAvIND https://t.co/xB7pW9VbuI
— ICC (@ICC) December 4, 2023South Africa have named their squads for the multi-format home series against India 👇#SAvIND https://t.co/xB7pW9VbuI
— ICC (@ICC) December 4, 2023
இவர் இதுவரை 1 ஒருநாள் போட்டி மற்றும் 16 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆதிரடி வீரரான ஹென்ரிச் கிளாசெனுக்கு டெஸ்ட் அணியில் இடம் வழங்கவில்லை.
மூன்று வடிவத்திற்கான தென் ஆப்பிரிக்கா அணிகள்
டி20 தொடர்: எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஒட்னியல் பார்ட்மேன், மேத்யூ ப்ரீட்ஸ்கே, நாந்த்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி (1வது மற்றும் 2வது டி20), டோனோவன் ஃபெரீரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன் (1வது மற்றும் 2வது டி20), ஹென்ரிச் என்ஜில், கெளசென், மஹாராஜ், எல். (1வது மற்றும் 2வது டி20), அண்டில் பெஹ்லுக்வாயோ, தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் லிசாட் வில்லியம்ஸ்.
ஒருநாள் தொடர்: எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஒட்னியேல் பார்ட்மேன், நான்ட்ரே பர்கர், டோனி டி ஜோர்ஜி, ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், மிஹ்லாலி ம்பொங்வானா, டேவிட் மில்லர், வியான் முல்டர், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, தப்ரைஸ் ஷம்சி, லீஸென் வைன்னேடர், ரஸ்ஸி வில்ஸ்வான்ஸ்வான்.
டெஸ்ட் தொடர்: டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், நான்ட்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, டோனி டி ஜோர்ஜி, டீன் எல்கர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், லுங்கி என்கிடி, கீகன் பீட்டர்சன், ககிசோ ரபாடா, ட்ரிஸ்டன் ஸ்டப்ரின் மற்றும் கெய்ல் வெர்ப்ஸ்.
இதையும் படிங்க: "டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் கடும் போட்டியாளராக இருப்பார்" - ஆஷிஸ் நெஹ்ரா!