கேப் டவுன்: இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகின்றது. முதல் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி கேப் டவுன் மைதானத்தில் நேற்று (ஜன.03) தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி, முதல் இன்னிங்ஸ் முடிவில் 55 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அந்த அணியின் விக்கெட் கீப்பர் கெயல் வெர்ரின்னே 15 ரன்களும், டேவிட் பெடிங்காம் 12 ரன்களும் அடித்தனர். இந்திய அணியின் சார்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர். மற்ற விக்கெட்டுகளை ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
-
Standing tall at Newlands 🤩
— ICC (@ICC) January 4, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
Aiden Markram smashes a crucial hundred for South Africa 💪#WTC25 | 📝 #SAvIND: https://t.co/LOJ3rIJjqS pic.twitter.com/AjVNcmZjKA
">Standing tall at Newlands 🤩
— ICC (@ICC) January 4, 2024
Aiden Markram smashes a crucial hundred for South Africa 💪#WTC25 | 📝 #SAvIND: https://t.co/LOJ3rIJjqS pic.twitter.com/AjVNcmZjKAStanding tall at Newlands 🤩
— ICC (@ICC) January 4, 2024
Aiden Markram smashes a crucial hundred for South Africa 💪#WTC25 | 📝 #SAvIND: https://t.co/LOJ3rIJjqS pic.twitter.com/AjVNcmZjKA
இதையடுத்து களம் கண்ட இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 34.5 ஓவர்களில் 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தலா 36 ரன்களும், விராட் கோலி 46 மற்றும் கே.எல்.ராகுல் 8 ரன்களும் எடுத்தனர். மற்ற 7 வீரர்களும் எவ்வித ரன்களும் எடுக்க முடியாமல் டக் ஆவுட் ஆகினர். கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி 11 பந்துகளில் 6 விக்கெட்களை இழந்தது இதுவே முதல் முறையாகும்.
தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா, லுங்கி நிகிடி மற்றும் நந்த்ரே பர்கர் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து, தனது இரண்டாவது இன்னிங்ஸை 98 ரன்கள் பின்னடைவுடன் தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி, முதல் நாள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 62 ரன்கள் சேர்த்தது.
இந்த நிலையில், இரண்டாவது நாளான இன்று ஆட்டம் தொடங்கிய நிலையில், தென் ஆப்பிரிக்கா அணி 36.5 ஓவர்கள் முடிவில் 176 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. தொடக்க வீரராக களம் இறங்கிய எய்டன் மார்க்ரம், நிதானம் மற்றும் அதிரடி கலந்த ஆட்டத்தின் மூலம் சதம் அடித்தார்.
அதன்பின் 106 ரன்களுக்கு சிராஜ் பந்துவீச்சில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்பில் 13.5 ஓவர்களை வீசிய ஜஸ்பிரீத் பும்ரா, 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
மற்ற பந்து வீச்சாளர்களான முகேஷ் குமார் 2 விக்கெட்களும், முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 79 ரன்களை இலக்காக இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.
இதையும் படிங்க: 2023-ஆம் ஆண்டின் கிரிக்கெட் நாயகர்கள்.. பேட் கம்மின்ஸ் முதல் விராட் கோலி வரை!