ETV Bharat / sports

IND VS SA: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி பந்துவீச்சு தேர்வு - இன்றைய டி20 போட்டிகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் கேசவ் மகாராஜ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

south-africa-opt-to-bowl-vs-india
south-africa-opt-to-bowl-vs-india
author img

By

Published : Jun 19, 2022, 7:08 PM IST

பெங்களூரு: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு ஆட்டங்களில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. மூன்றாவது, நான்காவது ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அந்த வகையில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.

பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் இன்று (ஜூன் 19) இறுதி போட்டி நடக்கிறது. முதலில் டாஸ் வென்ற கேசவ் மகாராஜ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய வீரர்கள் களமிறங்க உள்ளனர். இன்றையப் போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும். இந்தியா அணி வீரர்கள் சொந்த மண்ணில் தொடரை கைப்பற்ற கூடுலாக போராட வேண்டியுள்ளது. இந்தப் போட்டி மிகுந்த விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும்.

தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள்: கேசவ் மகராஜ்(கேப்டன்), குயின்டன் டி காக்(கீப்பர்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே.

இந்திய அணி வீரர்கள்: ரிஷப் பந்த் (கேப்டன்/கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அவேஷ் கான்.

இதையும் படிங்க: Kuortane Games: காயத்திலும் தங்கத்தை தட்டிச்சென்றார் நீரஜ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.