இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள், டி 20 போட்டிகளுக்கான இந்திய பெண்கள் அணியை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று (மே 14) அறிவித்தது. இதில் டெஸ்ட் அணியில் இளம் வீராங்கனையான ஷஃபாலி வர்மா முதன்முதலாக சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய மகளிர் அணி, ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி 20 போட்டிகள் கொண்ட தொடர்களை விளையாட இருக்கிறது.
டெஸ்ட் போட்டிகளின் இறுதி நாட்களில் கேம்-சேஞ்சர் என்ற பெயர் பெற்ற ஷஃபாலி வர்மாவின் ஆட்டம் அணிக்குத் தேவை என்பதால், அணி தேர்வர்கள் அவரை தேர்ந்தெடுத்திருக்க வாய்ப்புள்ளது. மேலும், ஷிகா பாண்டேவும், தானியா பாட்டீயாவும் அணிக்கு திரும்பியிருப்பது கூடுதல் பலம்.
இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி வரும் ஜூன் மாதம் 16ஆம் தேதி தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஜுன் 27ஆம் தேதி தொடங்குகிறது. இந்த மூன்று போட்டிகளும் முறையே பிரிஸ்டல், டவுன்டன், வொர்செஸ்டர் நகரங்களில் நடைபெறுகிறது.
அதேபோல், மூன்று பேட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 9ஆம் தேதி அன்று தொடங்குகிறது. இந்த நோர்தம்ப்டன், ஹோவ், செம்ஸ்போர்டு ஆகிய மைதானங்களில் நடைபெற இருக்கிறது
டெஸ்ட், ஒருநாள் போட்டிக்கான இந்திய பெண்கள் அணி: மிதாலி ராஜ் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் (துணை கேப்டன்), புனம் ராவத், பிரியா புனியா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, சினே ராணா, தானியா பாட்டீயா (விக்கெட் கீப்பர் ), இந்திராணி ராய் (விக்கெட் கீப்பர்), ஜூலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, பூஜா வஸ்திரகர், அருந்ததி ரெட்டி, பூனம் யாதவ், ஏக்தா பிஷ்ட், ராதா யாதவ்.
டி 20 இந்திய பெண்கள் அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, ரிச்சா கோஷ், ஹார்லீன் தியோல், சினே ராணா, தானியா பாட்டீயா (விக்கெட் கீப்பர்), இந்திராணி ராய் (விக்கெட் கீப்பர்), ஷிகா பாண்டே, பூஜா வஸ்திரகர், அருந்ததி ரெட்டி, ராதா யாதவ், சிமரன் தில் பகதூர்.
இதையும் படிங்க: முதல் டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கொண்ட விராட் கோலி, இஷாந்த் சர்மா!