ETV Bharat / sports

India Vs Australia : மேட்ச் பார்க்க போறீங்களா! முதல்ல இதை படிச்சுட்டு போங்க! எவ்வளவு ரூல்சு? - உலக கோப்பை கிரிக்கெட் 2023

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் உலக கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் மோதிக் கொள்வதை முன்னிட்டு சென்னை சேப்பாக்கம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. போட்டியை காண பார்வையாளர்கள் இரண்டு கட்ட சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், உணவு, தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை மைதானத்திற்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Chepauk
Chepauk
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2023, 11:31 AM IST

சென்னை : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் தங்களுக்குள் மோதிக் கொள்ளும் நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்தச் சுற்று தகுதி பெறும்.

நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாட்டின் 10 மைதானங்களில் நடைபெற்று வருகிறது. சென்னை, ஐதராபாத், மும்பை, பெங்களூரு, உள்ளிட்ட 10 நகரங்களில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் மட்டும் 5 லீக் ஆட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 8ஆம் தேதி சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் முதல் ஆட்டம் நடைபெறுகிறது.

முதல் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்நிலையில், சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இந்தியா - ஆஸ்திரேலியா லீக் ஆட்டத்தை காண வரும் பார்வையாளர்களுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடு விதித்து உள்ளனர்.

ஆட்டத்தை காண வரும் பார்வையாளர்கள் 2 கட்ட சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்படுவார்கள் என சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்து உள்ளது. மேலும், பார்வையாளர்கள் வேறேதும் அசம்பாவிதங்களில் ஈடுபடாமல் இருப்பதை கண்காணிக்கவும், பாதுகாப்பு சோதனைக்காகவும் 300 தனியார் பாதுகாப்பு பணியாளர்களை பயன்படுத்த சென்னை போலீசார் முடிவு எடுத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், உணவு, குடிநீர் பாட்டீல்கள் மைதானத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது என்றும் தேவைப்படும் பட்சத்தில் பார்வையாளர்கள் மைதானத்திற்குள் வாங்கிக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் மைதான நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பாதுகாப்பு பணிக்காக 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதாகவும், போட்டி நடைபெறும் அன்று மைதானத்திற்கு வெளியே 2 ஆயிரம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

போட்டி நடைபெறும் நாளில் போக்குவரத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சேப்பாக்கம், வாலாஜா சாலை, விக்டோரியா விடுதி இருக்கும் பகுதி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக போக்குவரத்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மைதானத்திற்குள் 300 தனியார் பாதுகாப்பு வீரர்களும், சாதாரண உடையில் போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், போட்டி நடைபெறுவதை முன்னிட்டு தற்போது முதலே சென்னை சேப்பாக்கம் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : Pakistan Vs Netherland : பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை! வெற்றி யாருக்கு?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.