டிரினிடாட்: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்று 1-0 என்ற புள்ளிகளில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்குமான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த வியாழக்கிழமை (ஜூலை 20) அன்று தொடங்கியது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பெளலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் சேர்த்தது. விராட் கோலி 87 ரன்களிலும், ஜடேஜா 36 ரன்களிலும் களத்திலிருந்தனர்.
இந்நிலையில் நேற்று (ஜூலை 21) 2வது நாள் ஆட்டம் தொடங்கியது. விராட் கோலி மற்றும் ஜடேஜா நிலைத்து நின்று ரன்களை குவித்தனர். சிறப்பாக விளையாடிய விராட் கோலி 11 பவுண்டரிகளுடன் 121 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். அதன் பின் ஜடேஜா 5 பவுண்டரிகளுடன் 61, இஷான் கிஷன் 4 பவுண்டரிகளுடன் 25, உனத்கட் 7, அஸ்வின் 8 பவுண்டரிகளுடன் 56 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதையும் படிங்க: Ashes Test: இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 384 ரன்கள் சேர்ப்பு - ஜாக் கிராலி சதம்!
இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 128 ஒவர்களில் 438 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் பெளலிங் தரப்பில் ரோச், வார்க்கன் இருவரும் தலா 3 விக்கெட்களும், ஹொல்டர் 2 விக்கெட்களும் கேப்ரியல் 1 விக்கெட்டையும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக களம் கண்ட கிரேக் பிராத்வைட் (கேப்டன்) மற்றும் டேகனரின் சந்தர்பால் நிதானமாக விளையாடி 71 ரன்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா சூழல் பந்துவீச்சில் சந்தர்பால் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இந்நிலையில் இரண்டாவது நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 41 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. கிரேக் பிராத்வைட் 3 பவுண்டரிகளுடன் 37 ரன்களுடனும், கிர்க் மெக்கென்சி 1 பவுண்டரியும், 1 சிக்சரும் அடித்து 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: IND vs WI: 500 ஆவது சர்வதேச போட்டியில் சதமடித்து சாதனை படைத்தார் ‘கிங் கோலி’!