பெங்களுரூ: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் இரு போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில், 3ஆவது, 4ஆவது போட்டியை இந்தியா வென்றது. அந்த வகையில், 2 - 2 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் பெற்றன.
இதைத்தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று (ஜூன் 19) நடைபெற்றது. கடந்த போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக கேப்டன் டெம்பா பவுமா இதில் பங்கேற்கவில்லை. முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் கேசவ் மகாராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி, 3.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை தொடர்ந்து நீடித்ததால், போட்டி ரத்துசெய்யப்படுவதாக நடுவர் அறிவித்தார். இதன்படி, 5 போட்டிகள் தொடர், 2 -2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: IND VS SA: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி பந்துவீச்சு தேர்வு