வெலிங்டன்: இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகளில் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதலாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. 2ஆவது டி20 போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று (நவம்பர் 22) மெக்லீன் பார்க் மைதானத்தில் 3ஆவது டி20 போட்டி நடந்தது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுத்தி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி களமிங்கிய நியூசிலாந்து வீரர்கள் 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களை எடுத்தனர். 161 ரன்கள் வெற்றி இலக்குடன் இந்திய பேட்டர்கள் களமிறங்கினர்.
முதலாவதாக, இஷான் கிஷன்-ரிஷப் பந்த் கூட்டணி பேட்டிங் செய்தது. அதில் கிஷன் 10 ரன்களிலும், பந்த் 11 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிச்சியளித்தனர். அதற்கு அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் விக்கெட்டை பறிகொடுத்தனர். 6 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகள் விழுந்தன. அதன்பின் வந்த ஹர்திக் பாண்டியா-தீபக் ஹூடா கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த வகையில் பாண்டியா 18 பந்துகளுக்கு 30 ரன்களையும், ஹூடா 9 பந்துகளுக்கு 9 ரன்களையும் எடுத்தனர். 9 ஓவர்கள் முடிவில் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதன்பின் சமன் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் 1-0 என்ற கணக்கில் இந்தியா டி20 தொடரை கைப்பற்றியது.
இதையும் படிங்க: உலக கோப்பை கால்பந்து: செனகலை வீழ்த்தியது நெதர்லாந்து