ஐபிஎல் தொடரில், கடந்த மூன்று சீசன்களாக பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாததால் அந்த அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த முன்னாள் இந்திய வீரர் அனில் கும்ளே நீக்கப்பட்டார்.
இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளர் பொறுப்பு வகித்து வந்த டிரெவர் பெய்லிஸை புதிய பயிற்சியாளராக பஞ்சாப் கிங்ஸ் அணி நியமித்து உள்ளது. டிரெவர் பெய்லிஸ் இதற்கு முன்னதாக கொல்கத்தா நைட் அணிக்கு பயிற்சியாளராகவும் , சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு பயிற்சியாளராகவும் ஐபிஎல் தொடரில் பங்கெடுத்துள்ளார்.
அவரது தலைமையில் கொல்கத்தா அணி 2012 மற்றும் 2014 சீசன்களில் மகுடம் சூடியது. 2019ல் இங்கிலாந்து அணி 50 ஓவர் உலக கோப்பை வென்றதும் இவரது தலைமையில் தான். அனுபவத்தின் அடிப்படையில் பஞ்சாப் அணி இவரை பயிற்சியாளராக நியமித்துள்ளது.
ஆனால் இவரது தலைமையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2021 சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை ஒருமுறை ஐபிஎல் கோப்பையை வென்றது இல்லை. ஒவ்வொரு சீசனுக்கும் புதிய வீரர்களை அதிக தொகைக்கு வாங்குவது, கேப்டன்களை மாற்றிக் கொண்டே இருப்பது, பயிற்சியாளர்களை மாற்றுவது என பல மாற்றங்கல் செய்தும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கோப்பை கிட்டவில்லை.
எனவே இவரை நியமித்தால் மட்டும் கோப்பையை வெல்ல முடியுமா என பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகத்தை டிவிட்டரில் ஐபிஎல் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: டென்னிஸ் விளையாட்டில் கோடிகளில் புரண்ட ரோஜர் பெடரர் - பரிசுத்தொகை விவரம்!