20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-2ல் இடம் பெற்றுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஷம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினார்கள். ஷஹீன் அப்ரிடி வீசிய முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் எல்.பி.டபுள்.யுவாகி அவுட்டானார். இந்த அதிர்ச்சியிலிருந்து ரசிகர்கள் மீள்வதற்குள் 3-வது ஓவரில் மீண்டும் ஷஹீன் அப்ரிடி வேகத்தில் கே.எல்.ராகுல் போல்டாகி வெளியேறினார்.
20 ஓவரில் 7 விக்கெட் இழப்பு
இந்திய அணி ஓபனிங் விக்கெட்களை அடுத்தடுத்து இழந்தது. 4-வது வீரராக சூர்யகுமார் யாதவ் களமிறங்கி ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசியதால் நிம்மதியடைந்தனர். ஆனால் அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை.
6-வது ஓவரில் ஹசன் அலி பந்துவீச்சில் சூர்யகுமார் யாதவ் தேவையில்லாத ஷாட் விளையாடி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்திய அணி பவர் பிளேவில் 36 ரன்களுக்கு 3 விக்கெட்களை பறிகொடுத்தது.
ரிஷப் பந்தை தொடர்ந்து வந்த ரவீந்திர ஜடேஜா 13 பந்துகளில் 13 ரன் மட்டுமே சேர்த்து பெவிலியன் திரும்பினர். மற்றொரு புறம் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் விராட் கோலி அரைசதம் கடந்தார். 19-வது ஓவரில் மீண்டும் அட்டாக்கிற்கு வந்த ஷஹீன் அப்ரிடி விராட் கோலி விக்கெட்டை தூக்கினார். இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.
வரலாற்றை மாற்றியமைத்த பாகிஸ்தான்
152 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் பாபர் ஆஷம் மற்றும் முகமது ரிஷ்வான் சிறப்பாக விளையாடினார்கள். இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்த இந்த ஜோடி விக்கெட் இழப்பின்றி விளையாடியது.
இருவரும் அரைசதம் கடந்து பாகிஸ்தானை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது. உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணியை முதன்முறையாக வெற்றி பெற்று வரலாற்றை மாற்றி அமைத்துள்ளது.
இதையும் படிங்க: டி20 உலகக் கோப்பை - 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இலங்கை!