ETV Bharat / sports

South Africa Vs Pakistan : அடுத்த சுற்றை உறுதி செய்யுமா பாகிஸ்தான்? தென் ஆப்பிரிக்காவுடன் மோதல்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் 26வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற பாகிஸ்தான் போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2023, 1:57 PM IST

Cricket
Cricket

சென்னை : 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன.

நடப்பு சீசன் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பாதி கிணற்றை கடந்து உள்ள நிலையில், அடுத்த சுற்று வாய்ப்பில் அணிம்கள் நீடிக்க இனி வரும் ஆட்டங்கள் அனைத்தும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர பாகிஸ்தான் அணி கடுமையாக போராடி வருகிறது.

சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நாளை (அக். 27) நடைபெறும் 26வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தென் ஆப்பிரிக்க நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வீறுநடை போட்டு வருகிறது. எதிர்கொண்ட ஐந்து ஆட்டங்களில் இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம் என நான்கு அணிகளை துவசம் செய்து புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

கடைசியாக 24ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற வங்கதேசம் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியை பொறுத்தவரை பேட்டிங் ஆர்டர் பலமாக காணப்படுகிறது. தொடக்க வீரர் குயின்டன் டி காக் நடப்பு சீசனில் இதுவரை 3 சதங்களை விளாசி முழு உடற்தகுதியில் உள்ளார்.

தொடக்க வீரர் குயின்டன் டி காக்கை கட்டுப்படுத்தினால் இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர்களால் ஜொலிக்க முடியும். அதேபோல் தென் ஆப்பிரிக்க அணியில் எய்டன் மார்க்ராம், ஹென்ரிச் கிளெசன், ரீஸா ஹெண்ட்ரீஸ் உள்ளிட்ட வீரர்களும் சிறப்பாக விளையாடி ரன் குவித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இரண்டு வெற்றி 3 தோல்வி என 4 புள்ளிகளுடன் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. எதிர்வரும் ஆட்டங்களில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும் என்கிற நிர்பந்தத்தில் பாகிஸ்தான் அணி உள்ளது. பாகிஸ்தானில் ஷாகீன் அப்ரிடி, ஷதாப் கான் உள்ளிட்டோர் நல்ல பார்மில் உள்ளனர்.

சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சொர்க்கபுரி என்பதாலும், கடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியிடம் கண்ட தோல்வியில் இருந்து கற்றுக் கொண்ட பாடத்தை வைத்தும் தென் ஆப்பிரிக்க அணிக்கு பாகிஸ்தான் கடும் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : India Vs England : இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுக்க திட்டம்! அஸ்வினுடன் களமிறங்கும் இந்தியா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.