ETV Bharat / sports

சாதனை மேல் சாதனை என்னைச் சேரும்..! - மலிங்காவின் மிரட்டல் பவுலிங் - மலிங்கா

பல்லேகேலெ: மலிங்கா தொடர்ச்சியாக நான்கு விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ளார்.

சாதனை மேல் சாதனை என்னைச் சேரும்..! - மலிங்காவின் மிரட்டல் பவுலிங்
author img

By

Published : Sep 7, 2019, 6:02 AM IST

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில், இலங்கையின் நட்சத்திர பந்துவீச்சாளர் மலிங்கா இரண்டு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். நியூசிலாந்தின் தொடக்க வீரரான முன்ரோவை கிளின் போல்டாக்கியதன் மூலம் டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை சாய்த்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

அதற்கு அடுத்த மூன்று பந்துகளில் ரூதர்போர்டு, கிராண்ட்ஹோம், டெய்லர் ஆகிய மூவரது விக்கெட்டுகளையும் கைப்பற்றியதன் மூலம், ஒருநாள் தொடர், டி20 ஆகிய இரு போட்டிகளிலும் நான்கு விக்கெட்டுகளை தொடர்ச்சியாக எடுத்த முதல் வீரர் என்ற பெருமையையும் சேர்த்து பெற்றுள்ளார். 2007ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் தொடர்ச்சியாக நான்கு விக்கெட்டுகளை மலிங்கா கைப்பற்றியுள்ளார்.

மேலும், மலிங்கா சர்வதேச போட்டிகளில் ஐந்தாவது முறையாக ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்துள்ளார். முதலில் ஆடிய இலங்கை அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது. மலிங்கா ஐந்து விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம் 88 ரன்னுக்குள் நியூசிலாந்து அணி சுருண்டு தோல்வியைத் தழுவியது. இதனால் இலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைத்துள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.