ETV Bharat / sports

New Zealand Vs Bangladesh : நியூசிலாந்து - வங்கதேசம் யாருக்கு வெற்றி? சென்னை மெட்ரோ ரயில் முக்கிய அறிவிப்பு! - World Cup Cricket 2023

நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டம் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

Nz
Nz
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 11:00 AM IST

Updated : Oct 13, 2023, 5:54 PM IST

சென்னை : 13வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாட்டின் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்நிலையில், இன்று (அக் .13) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் 11வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் விளையாடுகின்றன. நியூசிலாந்து அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கிய நியூசிலாந்து அணி, தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் கடந்த 9ஆம் தேதி நெதர்லாந்து அணியை 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளுடன் களமிறங்கும் நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் இணைவது கூடுதல் பலம் அளிக்கும்.

காயம் காரணமாக கடந்த இரண்டு ஆட்டங்களிலும் களமிறங்காத கேன் வில்லியம்சன், இன்றைய ஆட்டத்தில் நிச்சயம் விளையாடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அவரது வருகையால் வங்கதேசத்திற்கு கடுமையான சவால் காத்திருக்கிறது என்றே கூறலாம். இந்திய வம்சாவெளி வீரர் ரச்சின் ரவீந்திரா, வில் யங், டிவென் கான்வாய், கேப்டன் டாம் லாதம் என நியூசிலாந்து அணியில் ஒரு நட்சத்திர பட்டாளமே உள்ளது.

பந்துவீச்சை பொறுத்தவரை டிரென்ட் பவுல்ட், மேட் ஹென்ரி, மிட்செல் சான்ட்னர் உள்ளிட்டோர் நல்ல பார்மில் உள்ளனர். இதில் மிட்செல் சாட்னர் கடந்த நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் ஈர்த்தார். இன்றைய ஆட்டத்திலு, இவர்கள் அனைவரும் ஜொலிக்கும் பட்சத்தில் அது வங்கதேசத்திற்கு கடும் சவாலாக அமையும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

வங்கதேசம் அணியை பொறுத்தவரை தனது முதல் லீக் ஆட்டத்தில் கடந்த 7ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 137 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. வங்கதேசம் அணியை பொறுத்தவரை கேப்டன் ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம் உள்ளிட்டோரையே அந்த அணி பெரிதும் நம்பி இருக்கிறது.

இவர்களில் ஒருவர் சொதப்பும் பட்சத்தில் அது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சுழலில் வங்கதேசம் வீரர்கள் களமிறங்குவார் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை மைதானத்தில் நடைபெறுவதை முன்னிட்டு ரசிகர்களின் வசதிக்காக நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆட்டம் முடிந்து செல்பவர்கள் போட்டிக்கான டிக்கெட்டுகளை காண்பித்து மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க : தமிழக அரசின் துணை இருந்தால் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வோம்.. ஆசியர் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் நம்பிக்கை!

Last Updated : Oct 13, 2023, 5:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.