இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று (ஜூன்.13) நடைபெற்றது. மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 122 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
நான்காம் நாள் ஆட்டம்
நான்காம் நாள் ஆட்டத்தின் முதல் பந்திலேயே இங்கிலாந்து வீரர் ஒல்லி ஸ்டோன் டிரென்ட், போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். இரண்டாம் இன்னிங்சில் 122 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து, நியூசிலாந்து அணிக்கு 38 ரன்கள் என்ற சொற்ப இலக்கையே நிர்ணையித்தது.
எளிய இலக்கை எட்டிப்பிடிக்க களமிறங்கிய நியூசிலாந்துக்கு ஆரம்பம் சரியாக அமையவில்லை. தொடக்க வீரர் டேவோன் கான்வே மூன்று ரன்களுக்கும், அடுத்ததாக களமிறங்கிய வில் யங் எட்டு ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
டெஸ்ட் தொடரை வென்ற நியூசிலாந்து
இருப்பினும், இறுதியில் 10.5ஆவது ஓவரில் வெற்றி இலக்கைக் கடந்து எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. இதன்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்றக் கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
ஆட்ட நாயகனாக நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மேட் ஹென்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம், 22 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.
-
Team 🏆 #ENGvNZ pic.twitter.com/3tTw4GI38X
— BLACKCAPS (@BLACKCAPS) June 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Team 🏆 #ENGvNZ pic.twitter.com/3tTw4GI38X
— BLACKCAPS (@BLACKCAPS) June 13, 2021Team 🏆 #ENGvNZ pic.twitter.com/3tTw4GI38X
— BLACKCAPS (@BLACKCAPS) June 13, 2021
அடுத்ததாக வரும் ஜூன் 18ஆம் தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவை நியூசிலாந்து எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க: பிரெஞ்ச் ஓபன் 2021: டபுல் சாம்பியன் பட்டம் வென்று கிரெஜ்சிகோவா சாதனை