ETV Bharat / sports

TNPL 2022: நெல்லைக்கு 4ஆவது வெற்றி - அருண் கார்த்திக்கின் அபார சதம் வீண்!

author img

By

Published : Jul 6, 2022, 9:59 AM IST

டிஎன்பிஎல் தொடரில் மதுரை அணிக்கு எதிரான லீக் போட்டியில், நெல்லை அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தங்களது 4ஆவது வெற்றியை பதிவுசெய்துள்ளது. மதுரை அணியின் நட்சத்திர வீரர் அருண் கார்த்திக் சதம் அடித்தும் அந்த அணியை தோல்வியை தழுவியது.

நெல்லை ராயல் கிங்ஸ் தொடர்ச்சியாக 4வது வெற்றி

திண்டுக்கல்: தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் டி20 தொடர் கடந்த ஜூன் 23ஆம் தேதி திருநெல்வேலியில் தொடங்கியது. இத்தொடரின் 10ஆவது லீக் போட்டியில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணியும், என்எஸ் சதுர்வேத் தலைமையிலான சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில், டாஸை இழந்த நெல்லை அணி முதலில் பேட்டிங் செய்து 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 209 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சஞ்சய் யாதவ் 70 (42), ஸ்ரீநிரஞ்சன் 47 (27), பாபா இந்திரஜித் 34 (18) ரன்களை எடுத்தனர். மதுரை அணி சார்பில் கிரண் ஆகாஷ் 2 விக்கெட்டுகளையும், மிதுன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

210 என்கிற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய மதுரை அணிக்கு, நெல்லையின் அறிமுக வீரர் கே.ஈஸ்வரன் மிகப்பெரிய அதிர்ச்சியளித்தார். டிஎன்பிஎல் வரலாற்றில் அறிமுகப் போட்டியின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்திய ஆறாவது வீரர் என்ற சாதனையைப் புரிந்ததோடு அனுபவ வீரர் அனிருத் (1 ரன்) மற்றும் ஆதித்யாவிற்கு பதிலாக மாற்று வீரராக களமிறங்கிய ராஜ்குமார் (4 ரன்கள்) ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தலான அறிமுகத்தை இந்தப் போட்டியில் ஏற்படுத்தினார்.

சதமடித்த அருண் கார்த்திக்
சதமடித்த அருண் கார்த்திக்

விக்கெட்கள் விழுந்தாலும் அருண் கார்த்திக், கேப்டன் சதுர்வேத் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இணைந்து அணியின் ரன்களை சற்று உயர்த்த சதுர்வேத் 27 (15) ரன்கள் எடுத்து ஹரிஷின் சுழலில் ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்து களமிறங்கிய கெளஷிக் நிதானமாக விளையாடி அருண் கார்த்திக்குடன் நம்பிக்கையான பார்ட்னர்ஷிப்பை அமைக்க முனைய அவரும் தனது விக்கெட்டை ஹரிஷிடம் இழந்தார்.

அடுத்து வந்த சன்னி சந்து, தலைவன் சற்குணம் ஆகியோர் விரைவாக தங்களது விக்கெட்களை பறிகொடுத்தனர். ஒரு புறம் விக்கெட்கள் விழுந்தாலும் அருண் கார்த்திக் மட்டும் தனி ஒருவனாக போராடி இந்த சீஸனில் முதல் சதத்தை பதிவு செய்தார். அதோடு டிஎன்பிஎல் வரலாற்றில் 2 சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். அருண் கார்த்திக் நீண்ட நேரம் போராடி 57 பந்துகளில் 12 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உள்பட 106 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

20 ஓவர்களில் 183 ரன்களை மட்டும் எடுத்த மதுரை அணி, 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து. இதன்மூலம், இந்த தொடரில் தொடர்ச்சியாக நான்காவது முறையாக வெற்றி பெற்றது. மதுரை அணிக்காக அருண் கார்த்திக் சதமடித்தாலும், நெல்லை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்த சஞ்சய் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வானார். இந்த சீசனில் மூன்றாவதாக ஆட்டநாயகன் விருதை சஞ்சய் யாதவ் பெறுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ENG vs IND Test: மைதானத்தில் நிறவெறி துவேஷம் - பொங்கி எழுந்த இந்திய ரசிகர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.