கொல்கத்தா: நடப்பாண்டு உலகக் கோப்பை தொடர் கடந்த அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கி கடந்த மாதம் 19ஆம் தேதி முடிவடைந்தது. லீக் ஆட்டங்களில் ஒரு தோல்வியை கூட காணாத இந்திய அணிக்கு தோல்வியை பரிசளித்தது ஆஸ்திரேலிய அணி. இதை யாரும் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இது அனைவருக்கும் அதிர்ச்சியையே அளித்தது.
இருப்பினும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இதுவரையில் பார்க்காத சிறந்த அணியாக உள்ளது என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக ரோகித் சர்மா வழக்கம் போல் அதிரடியை காட்டி பந்து வீச்சாளர்களை மிரள வைத்தார். இவரது அதிரடியான ஆட்டம் இந்திய அணிக்கு பெரிதாக உதவியது. இது எல்லாம் எப்படி சாத்தியம்? ஒரே இரவில் நிகழ்ந்தவையா? என்றால் இல்லை.
இவை எல்லாம் 10 ஆண்டுகள் ஐசிசி கோப்பையை வெல்லாததின் தாக்கம் என்று எடுத்து கொண்டாலும் சரி, இல்லை பிசிசிஐ-யின் நீண்ட கால திட்டம் என்று எடுத்து கொண்டாலும் சரி. பிசிசிஐ இந்திய ஏ அணி, பி அணி என அடுத்த 10 ஆண்டுகளுக்கான அணியை உருவாக்கி வைத்துள்ளது.
ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு யார் யார் சரியாக இருப்பார்கள் என்பதை கண்டரிந்து தேர்வு செய்கின்றனர் தேசிய கிரிக்கெட் அகாடமின் (NCA) தேர்வாளர்கள். மேலும், எங்களிடம் தற்போது இருப்பது போல் சிறந்த XI பெஞ்சில் உள்ளது. யாருக்காவது காயம் ஏற்பாட்டாலோ அல்லது ஃபார்மில் இல்லாமல் போனாலோ மாற்று வீரர்கள் தயாராக உள்ளனர். ஏரதாள 33 வீரர்கள் சிறந்த வீரர்களாக எங்களிடம் உள்ளனர் என பிசிசிஐ வட்டாரம் தெரிவிக்கிறது.
அக்டோபர் 18ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தின் போது இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு கனுக்காலில் காயம் ஏற்பட்டது. இவர் அதன் பின் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை. இறுதி போட்டியில் தோல்வி அடைந்த போது ஹர்திக் பாண்டியா அணியில் இருந்திருக்கலாம் என்று விமர்சனம் எழுந்தது.
ஒரு பக்கம் இவர் அணியில் இல்லாதது நாளேயே குறைந்த போட்டியில் 24 விக்கெட்களை கைப்பற்றிய முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்திய அணி லீக் போட்டிகள் தாண்டி அரையிறுதி, இறுதி போட்டி என முன்னேறியதற்கு ஷமியின் பந்து வீச்சு முக்கிய காரணம் எனலாம்.
அதேபோல் காயத்தில் இருந்து மீண்டு வர தேசிய கிரிக்கெட் அகாடமி வீரர்களுக்கு பெரிதாக உதவி வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் கார் விபத்துக்குள்ளான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷ்ப் பண்ட்டை தற்போது NCA தயார் செய்து வருகிறது.
மூன்று வடிவத்திற்கும் தனி பிளேயிங் 11 கொண்டுள்ளது இந்திய அணி. குறிப்பாக வர இருக்கும் 2024 உலகக் கோப்பை தொடருக்காக அணியை தயாராகி வருகிறது. மேலும், ரிங்கு சிங் தற்போது ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் மட்டும் விளையாடி வந்தாலும், விரைவில் அவர் மற்ற வடிவத்திலும் பங்கேற்பார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: உலகக் கோப்பையில் இந்தியா ஆடிய 5 ஆடுகளங்கள் சுமார் தான்... ஐசிசி கூறுவது என்ன?