வங்கதேசம்: வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை வெற்றி பெற்றது. தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் முதல் போட்டியில் வங்கதேசம் 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி தாக்காவில் தொடங்கியது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேசம் பேட்டிங்கில் தடுமாறியது. இப்போட்டியில் பேட் செய்ய களமிறங்கிய முஷ்பிகுர் ரஹிமுக்கு நியூஸிலாந்து அணியின் ஜேமிசன் பந்து வீசினார். அப்போது பந்து பேட்டில் பட்டு ஸ்டம்பில் அடிப்பதை ரஹிம் தனது கையால் தடுக்க முயன்றார்.
ஐசிசி விதிமுறைப்படி பேட்ஸ்மென் பந்தை கையால் தடுப்பது அவுட் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று நியூஸிலாந்து வீரர்கள் அவுட் என அம்பயரிடம் அப்பீல் செய்தனர். இதற்கு அம்பயர் கையால் பந்தை தடுத்ததாக obstructing the field முறையில் அவுட் கொடுத்தார். இதன் மூலம் முஷ்பிகுர் ரஹிம் கிரிக்கெட் வரலாற்றில் பந்தை கையால் தடுத்து அவுட்டான முதல் வீரர் என்ற சோதனையான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
முன்னதாக இந்த வருடம் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இலங்கை வீரர் ஆஞ்சலோ மேத்யூஸ் தாமதமாக பேட்டிங் செய்ய வந்ததாக timed out முறையில் அவுட் கொடுக்கப்பட்டார். இன்று முஷ்பிகுர் ரஹிம் வித்தியாசமான obstructing the field முறையில் அவுட்டாகி இருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே பேசுபொருளாகி உள்ளது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவில் பாபர் அசாமின் அட்ராசிட்டி - பேட்டிங்கை மறந்து விக்கெட் கீப்பிங்கில் இறங்கிய வேடிக்கை!