ETV Bharat / sports

இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாகம் - பெங்களூருவில் 'தோனி கிரிக்கெட் அகாடமி' - கர்நாடக மாநிலம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எம்.எஸ் தோனி கிரிக்கெட் அகாடமி தொடங்கப்பட்டுள்ளது.

தோனி கிரிக்கெட் அகாடமி தொடக்க விழா
தோனி கிரிக்கெட் அகாடமி தொடக்க விழா
author img

By

Published : Oct 13, 2021, 6:57 PM IST

பெங்களூரு: MSDCA என்று பெயரிடப்பட்டுள்ள எம்.எஸ் தோனி கிரிக்கெட் அகாடமி நேற்று (அக். 12) தொடங்கப்பட்டது. முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனும், நடப்பு ஐபிஎல் தொடரின் சிஎஸ்கே அணியின் கேப்டனுமான தோனி பெயரில் இந்த அகாடமி தொடங்கப்பட்டுள்ளது.

நேற்று பெங்களூருவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கேம் பிளே மற்றும் ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனம் எம்.எஸ் தோனி அகாடமியை அறிமுகம் செய்து வைத்தனர். நவம்பர் 7 ஆம் தேதி முதல் இங்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த அகாடமி பெங்களூரு, கட அக்ரஹாராவில் உள்ள பிடாரஹள்ளி ஹோப்ளி என்ற இடத்தில் அமைந்துள்ளது.

அகாடமியின் ஆலோசகராக தோனி

இந்த அகாடமியின் ஆலோசகராக உள்ள தோனி, தொடங்க விழாவிற்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இந்த கிரிக்கெட் அகாடமி தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் திறமைகளை மேலும் வளர்க்க சிறந்த தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் 360 டிகிரி பயிற்சி அணுகுமுறையை வழங்குவதே இதன் நோக்கம். சிறந்த பயிற்சியாளர்கள், உடற்பயிற்சி நிபுணர்கள் கொண்டு பயிற்றுவிக்கப்படும். இன்றே பதிவு செய்து, பயன் பெறுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

தோனி கிரிக்கெட் அகாடமி தொடக்க விழா
தோனி கிரிக்கெட் அகாடமி தொடக்க விழா

மேலும் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு தோனி ஆலோசனை வழங்கியுள்ளார். அதில் நன்கு பயிற்சி செய்வதில் கவனம் செலுத்துங்கள். நன்கு பயிற்சி செய்தால் அதற்கான முடிவு நிச்சயம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

தோனி கிரிக்கெட் அகாடமி தொடக்க விழா
தோனி கிரிக்கெட் அகாடமி தொடக்க விழா

மிஹிர் திவாகர், ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் கூறுகையில், "6 முதல் 19 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் அகாடமியில் சேரலாம். தகுதி வாய்ந்த சிறுவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும்" என்றார்.

தோனி கிரிக்கெட் அகாடமி தொடக்க விழா

இதையும் படிங்க: நெடுமுடி வேணு குறித்து நினைவோடையை பகிர்ந்த மம்முட்டி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.