கராச்சி: உலக கோப்பை டி20 தொடர் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்க தேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நமீபியா, ஸ்காட்லாந்து, இலங்கை, மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, ஜிம்பாப்வே என 16 நாடுகள் பங்கேற்கின்றன. அந்த வகையில் பல்வேறு அணிகள் வீரர்களின் பட்டியலை அறிவித்துவருகின்றன.
அதைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் அசாம் கேப்டனாகவும், ஷதாப் கான் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்காமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் சஹீன் ஷா அப்ரிடி பட்டியலில் உள்ளார்.
பாகிஸ்தான் அணி: பாபர் ஆசம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), ஆசிப் அலி, ஹைதர் அலி, ஹாரிஸ் ரவுஃப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது நசீம் ஜூனியர் ஷா, ஷஹீன் ஷா அப்ரிடி, ஷான் மசூத் மற்றும் உஸ்மான் காதர்.
காத்திருப்பு வீரர்கள்: ஃபகார் ஜமான், முகமது ஹாரிஸ் மற்றும் ஷாநவாஸ் தஹானி.
இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான பாகிஸ்தான் அணி: பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), அமீர் ஜமால், அப்ரார் அகமது, ஆசிப் அலி, ஹைதர் அலி, ஹாரிஸ் ரவுஃப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ், முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான் முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ஷாநவாஸ் தஹானி, ஷான் மசூத் மற்றும் உஸ்மான் காதர்.
இதையும் படிங்க: உலக கோப்பை டி20: சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த IND Vs PAK போட்டிக்கான டிக்கெட்டுகள்