ஸ்ரீநகர்: லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. இதில், இந்தியா கேப்பிடல்ஸ் அணி, பில்வார கிங்ஸ் அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில், இதன் இரண்டாவது சீசன் வரும் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த தொடரானது, இந்தியாவின் - ராஞ்சி, டேராடூன், ஜம்மு, விசாகப்பட்டினம் மற்றும் சூரத் ஆகிய 5 நகரங்களில் நடைபெறும் என லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 22 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 19 போட்டிகள் நடத்தப்படுகிறது.
ராஞ்சியில் தொடங்கப்படும் இந்த சீசன், நவம்பர் 24ஆம் தேதி டேராடூனிலும், நவம்பர் 27 முதல் டிசம்பர் வரை நான்கு போட்டிகள் ஜம்முவிலும், டிசம்பர் 2 முதல் 4 வரை விசாகப்பட்டினத்தில் 3 போட்டிகளும் நடத்தப்படுகிறது.
-
Mark Your Calendars!🗓️#LegendsLeagueCricket fixtures for the upcoming season, starting from 18th Nov, are out.📢 #LLCT20
— Legends League Cricket (@llct20) October 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Watch out for more information. @CapitalsIndia @Bhilwarakings @manipal_tigers @GujaratGiants @SSuper_Stars @Urbanrisers_Hyd pic.twitter.com/sd6Pc0qPJP
">Mark Your Calendars!🗓️#LegendsLeagueCricket fixtures for the upcoming season, starting from 18th Nov, are out.📢 #LLCT20
— Legends League Cricket (@llct20) October 21, 2023
Watch out for more information. @CapitalsIndia @Bhilwarakings @manipal_tigers @GujaratGiants @SSuper_Stars @Urbanrisers_Hyd pic.twitter.com/sd6Pc0qPJPMark Your Calendars!🗓️#LegendsLeagueCricket fixtures for the upcoming season, starting from 18th Nov, are out.📢 #LLCT20
— Legends League Cricket (@llct20) October 21, 2023
Watch out for more information. @CapitalsIndia @Bhilwarakings @manipal_tigers @GujaratGiants @SSuper_Stars @Urbanrisers_Hyd pic.twitter.com/sd6Pc0qPJP
இதனைத் தொடர்ந்து, அரையிறுதி போட்டிகளில் சூரத்தில் டிசம்பர் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் நடத்தப்படுகிறது. மேலும், இந்த தொடரின் இறுதிப் போட்டியானது அரையிறுதி முடிவடைந்து 2 நாட்கள் இடைவெளிக்குப் பின் டிசம்பர் 9ஆம் தேதி நடத்தப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ராமன் ரஹேஜா கூறியதாவது; "கடந்த ஆண்டு நடத்தப்பட்ட லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் பெரும் வரவேற்பைப் பெற்றது. வர இருக்கும் சீசனின் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க நாங்கள் தயாராக உள்ளோம். இந்தியாவின் 5 நகரங்களில் போட்டியை மட்டும் நடத்துவது எங்கள் எண்ணம் அல்ல. அதன் மூலம் விளையாட்டின் மீதுள்ள அன்பையும் ஆர்வத்தையும் பரப்ப உள்ளோம்." என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த தமிழக வீரர்கள் யார் யார்?