ETV Bharat / sports

அக்டோபர் மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி அறிவிப்பு - ஐசிசி அக்டோபர் மாத சிறந்த கிரிக்கெட் வீரர்

ஐசிசியின் அக்டோபர் மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி அறிவிக்கப்பட்டார்.

Kohli named ICC player of month for October

author img

By

Published : Nov 7, 2022, 9:25 PM IST

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா கிரிக்கெட் அணி அரையிறுத்திக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி ஐசிசியின் அக்டோபர் மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த சிறந்த கிரிக்கெட் வீரர் தேர்வு பரிந்துரையில் ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ரசா, தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் உள்ளிட்டோரும் இருந்தனர். மறுப்புறம் மகளிர் பிரிவில் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக பாகிஸ்தான் அணியின் நிதா தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான பரிந்துரையில் இந்திய வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மாவும் இருந்தனர்.

டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியின் அபாரமான ஆட்டங்கள் அதிகளவில் பேசப்பட்டுவருகின்றன. சில மாதங்களாகவே விராட் கோலி மீது பல்வேறு விமர்சனங்கள் வந்த நிலையில் அவர் மீண்டும் தன்னை சிறந்த வீரராக நிரூப்பித்துகாட்டியுள்ளார். அதன் வெளிப்பாடாகவே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவரது பெயரை அறிவித்துள்ளது. இதுகுறித்து விராட் கோலி கூறுகையில், ஐசிசியின் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாகும். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் ஐசிசி தேர்வு குழுவினரால் தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்த பாராட்டை மேலும் சிறப்பாக்கியுள்ளது. என்னுடைய அணியினர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த எனக்கு முழு ஆதரவு கொடுத்தனர். அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அதேபோல இந்த மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் பரிந்துரையில் இருந்த வீரர்களுக்கும் பாராட்டுகளையும் நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஐசிசியின் தேர்வு குழு உறுப்பினருமான டேரன் கங்கா கூறுகையில், விராட் கோலி மிகச்சிறந்த பேட்ஸ்மேன். இக்கட்டான நேரத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 49 ரன்களை எடுத்தார். அவரது ஆட்டம் அந்தப்போட்டியையே கடைசி சில பந்துகளில் மாற்றியது. அதேபோல பாகிஸ்தானுக்கு எதிரான அவரது ஆட்டம் நினைவுக்கூரத்தக்கது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்தியா அபார வெற்றி... சூர்யகுமார் மேஜிக்... இங்கிலாந்துடன் அரையிறுதி...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.