ETV Bharat / sports

தொடர் தோல்விக்கு எண்ட்-கார்ட் போட்ட கேகேஆர்! - IPL 2021

ஐபிஎல் டி20 போட்டியின் 21ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிபெற்றது.

KKR
கேகேஆர்
author img

By

Published : Apr 27, 2021, 7:44 AM IST

Updated : Apr 27, 2021, 7:58 AM IST

ஐபிஎல் தொடரின் 21ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. அகமதாபாத் நகரில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 123 ரன்களைச் சேர்த்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் பிரசித் கிருஷ்ணா மூன்று விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ், சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

124 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்னும் எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு, ஆரம்பமே கதிகலங்கச் செய்தது. நட்சத்திர வீரர்களான சுப்மன் கில் 9 ரன்களிலும், நித்திஷ் ராணா, நரைன் டக் அவுட்டாகி நடையைக் கட்டினர்.

KKR vs PBKS:
வெற்றி புன்னகையில் கேப்டன் மார்கன்

கொல்கத்தாவின் தொடர் தோல்வி இதிலும் தொடருமோ என ரசிகர்கள் அஞ்சிய நிலையில், அணியின் கேப்டன் தூணாக மாறினார். நிதானமாக ஆடி, வெற்றிக்கனியைப் பறித்தார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. . கேப்டன் மோர்கன் 40 பந்துகளில் 47 ரன்களை எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது மட்டுமின்றி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்திலிருந்து 5ஆவது இடத்துக்கு முன்னேறியது.

இதையும் படிங்க: இந்திய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் பிசியான நேரத்தில் மக்கள் நாயகனாக வலம்வரும் ஆஸி வீரர்!

Last Updated : Apr 27, 2021, 7:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.